கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

முன்னணி இருசக்கர உற்பத்தி நிறுவனமான கேடிஎம் தனது அடுத்த அறிமுக பைக்காக 390 அட்வென்ஜரை விரைவில் நடைபெறவுள்ள இந்திய பைக் வாரம் 2019 கண்காட்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் அறிமுகம் கண்காட்சியில் மாலை 4:30 மணியளவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா, பஜாஜ் நிறுவனத்தின் ப்ரோபைக்கிங் இயக்குனர் சுமீத் நரங் மற்றும் கேடிஎம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் துணை இயக்குனர் ஃப்ளோரியன் பர்குட் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

இதற்கு முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற ஐக்மா 2019 கண்காட்சியில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த பைக் இந்திய வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ட்யூக் 390 பைக் கொண்டுள்ள 373சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை தான் இந்த 390 அட்வென்ஜர் பைக்கும் கொண்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

ட்யூக் 390 என்ஜின் 43 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜினின் வெளியிடும் ஆற்றலை 390 அட்வென்ஜர் பைக்கில் சிறிது மாற்றத்துடன் எதிர்பார்க்கலாம்.

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற விதத்தில் 390 அட்வென்ஜர் பைக் இருக்கும். இதனால் இந்த பைக்கில் 19-இன்ச் முன் சக்கரம், ட்யூல்-பர்பஸ் டயர்ஸ், பெரிய அளவில் வீல்பேஸ், அதிகப்படியான க்ரவிண்ட் க்ளீயரென்ஸ், உயரமான இருக்கை அமைப்பு மற்றும் அளவில் பெரிய பெட்ரோல் டேங்க் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கிற்கான விலை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. நமக்கு தெரிந்தவரை இந்த பைக்கின் விலை ரூ.2.85 லட்சத்தில் இருந்து ரூ.3.25 லட்சம் வரை எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்படலாம். இந்த 390 அட்வென்ஜர் பைக் அறிமுகத்திற்கு பின்னர், ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராடின் ஜி310ஜிஎஸ் போன்ற தனது பிரிவில் உள்ள மற்ற பைக் மாடல்களுடன் போட்டியிடவுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

390 அட்வென்ஜர் பைக் எவ்வாறான செயல்திறனை பெற்றுள்ளது என்பதை இந்த இந்திய பைக் வாரம் 2019 கண்காட்சியில் சில ரைடர்கள் மூலம் நிரூபிக்க கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் கேடிஎம் நிறுவனம் தனது பிரபலமான பைக்குகளை பிஎஸ்6 தரத்தில் மாற்றும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேடிஎம்-ன் எந்த பைக் முதலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாகவுள்ளது என்பதை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

கேடிஎம் 390 அட்வென்ஜர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியீடு...

390 அட்வென்ஜர் பைக்கின் செயல்திறனை ரைடர்ஸ் மூலமாக தான் அறிய வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனெனில் கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகள் அனைத்தும் என்ஜின் தரத்தில் மிக சிறந்தவையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் தொழில்முறை ரைடர்கள் 390 அட்வென்ஜர் பைக்கை இயக்குவதை பார்க்க கேடிஎம் பைக் பிரியர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Adventure 390 To Make India Debut At India Bike Week 2019
Story first published: Monday, December 2, 2019, 15:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X