கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் 2019 அக்டோபர் மாதத்திற்கான விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ட்யூக் மற்றும் ஆர்சி 125 மாடல்கள் கடந்த மாதத்தில் சிறந்த முறையில் விற்பனையாகியுள்ளது தெரிய வருகிறது.

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

கடந்த மாதத்தில் 3004 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த ட்யூக் மற்றும் ஆர்சி 125 பைக்குகள் இந்தியாவில் இந்த வருடத்தின் துவக்கத்தில் தான் அறிமுகமாகியிருந்தன. இந்த பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் கேடிஎம் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் மாடல்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

இந்த 125 ட்வின் பைக்குகளுக்கு அடுத்ததாக இந்நிறுவனத்தின் 200சிசி பைக்குகளான ஆர்சி மற்றும் ட்யூக் 200 சிறப்பாக விற்பனையாகி உள்ளன. இந்திய மார்க்கெட்டில் கேடிஎம் நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தயாரிப்பு வாகனங்களாக விளங்கும் இந்த 200 ட்வின் பைக்குகள் கடந்த அக்டோபர் மாதத்தில் 2432 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கேடிஎம் நிறுவனத்தின் இந்த 200சிசி பைக்குகள் எக்ஸ்ஷோரூமில் ரூ.1.61 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

இவற்றிற்கு அடுத்து கேடிஎம் நிறுவனத்தின் கடந்த மாத சிறந்த விற்பனை பைக்காக ட்யூக் 250 மாடல் 666 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. 200 ட்வின்ஸ் பைக்குகளின் விற்பனைக்கும் ட்யூக் 250 பைக்கின் கடந்த மாத விற்பனைக்கும் மிக பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

கேடிஎம் நிறுவனத்தில் இருந்து ஆர்சி வேரியண்ட் வழங்கப்படாத ஒரே மாடலாக விளங்கும் ட்யூக் 250 பைக், 249சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜினுடன் விற்பனையாகி வருகிறது. இந்த என்ஜின் ஆனது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் 29.6 பிஎச்பி பவரையும் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

ட்யூக் 390 மற்றும் ஆர்சி 390, இருபைக்குகளும் கடந்த மாதத்தில் 361 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளன. ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் வரையில் 390 ட்வின் பைக்குகள் தான் கேடிஎம் நிறுவனத்தின் தனித்துவமான பைக்குகளாக இருந்தன.

Most Read:போலீஸ்காரர்களிடமே வேலையை காட்டிய புள்ளிங்கோ... டாட்டா காட்டியதற்கு கிடைத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

ஆனால் அதன் பின் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ட்யூக் 790 பைக் மாடல் தான் இந்திய சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் தனித்துவமான மாடலாக உள்ளது. செப்டம்பரில் 41 பைக்குகள் விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ட்யூக் 790 கடந்த மாதத்தில் வெறும் 18 யூனிட்கள் தான் விற்பனையாகியுள்ளது. இந்த பைக் இந்திய சந்தையில் ரூ.8.64 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read:இந்தியாவில் தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎஸ்6 பைக்குகள் இவைதான்...

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

சமீபத்தில் கேடிஎம் நிறுவனம் ட்யூக் 790 பைக்கை சிபியூ முறையில் (முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில்) இந்தியாவில் இறக்குமதி செய்திருந்தது. ஆனால் 100 யூனிட்கள் மட்டுமே இந்த மாதத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், அடுத்த மாதத்திற்கான இறக்குமதி பிஎஸ்6 தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்யூக் 790 பைக்கில் உள்ள 799சிசி இணையான ட்வின், லிக்யூடு-கூல்டு என்ஜின் 104 பிஎச்பி பவரையும் 86 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது.

Most Read:பஜாஜ் ஆர்எஸ்200 பைக்கின் ட்யூல்-சேனல் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

கேடிஎம் நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம்... எந்த பைக் அதிகளவில் விற்பனையானது தெரியுமா?

கேடிஎம் நிறுவனம் தனது பைக் மாடல்களை பிஎஸ்6 தரத்தில் தயாரித்து வருவதால் இவற்றின் தற்போதைய விலைகளில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இவற்றின் அறிமுகம் அடுத்த மாதத்தில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக வரும் 6ஆம் தேதி 390 மாடலின் அட்வென்ஜர் பைக் ஐபிடபிள்யூ 2019 கண்காட்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Sales In India For October 2019: 125 Duke & RC Emerge As Best-Selling Models
Story first published: Saturday, November 30, 2019, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X