டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கடந்த மாதம் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் விற்பனையில் அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கேடிஎம் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இதனால், ட்யூக் வரிசையில் 200சிசி, 250சிசி மற்றும் 390 சிசி திறன் கொண்ட மாடல்களை கேடிஎம் களமிறக்கியது.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இந்த வரிசையில், கடந்த ஆண்டு இறுதியில் கேடிஎம் ட்யூக் வரிசையில் விலை குறைவான 125சிசி பைக் மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. வழக்கம்போல் மிக அசத்தலான டிசைன் மற்றும் 125சிசி ரக பைக் மாடல்களில் மிக அதிக திறன் கொண்ட மாடலாக வந்த இந்த பைக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

ஆம். கடந்த மாதம் 2,414 ட்யூக் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, பிற அனைத்து கேடிஎம் பைக்குகளின் இணையான விற்பனை எண்ணிக்கையை இந்த புதிய 125 ட்யூக் மாடல் பதிவு செய்து அசத்தி இருக்கிறது.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கடந்த மாதம் 935 ட்யூக் 200 பைக்குகளும், 135 ட்யூக் 250சிசி பைக்குகளும், 106 ட்யூக் 390 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதிய 125 ட்யூக் பைக் மாடலுக்கான வரவேற்பு கேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் டிசைன் அம்சங்கள் மற்றும் பல முக்கிய உதிரிபாகங்களை 125 ட்யூக் பைக் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த பைக் ரூ.1.18 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. அதாவது, கேடிஎம் நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக வந்ததும் முக்கிய காரணமாக கூறலாம்.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கேடிஎம் 200 மாடலின் சேஸீதான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் 124சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இந்த பைக்கில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் விற்பனையில் அசத்திய புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இந்த பைக்கில் பின்சக்கரம் மேலே தூக்குவதை தவிர்க்கும் லிஃப்ட் புரோடெக்ஷன் தொழில்நுட்ப வசதியும் உள்ளது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த பைக் மாடலாக இருப்பதால் தொடர்ந்து இந்திய இளைஞர்களின் முக்கிய தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM India recently launched their new entry-level offering, the Duke 125 in the Indian market in November 2018. With its first full month of sales in December, KTM has recorded 2,414 units during the previous month.
Story first published: Tuesday, January 22, 2019, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X