டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

பெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது குறித்து நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்தநிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக, டீலர்களுக்கு புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்குகள் வந்துள்ளன.

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

கேடிஎம் பைக் மாடல்களில் ட்யூக் வரிசை பைக்குளின் டிசைன் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. விற்பனையிலும் கொடி கட்டி பறக்கிறது. இதனால், ட்யூக் வரிசையில் பல்வேறு சிசி திறன்களில் புதிய மாடல்களை கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

கேடிஎம் ட்யூக் வரிசையில், 200, 250, 390 மாடல்கள் விற்பனையில் இருந்த நிலையில், ட்யூக் வரிசையில் மிக குறைவான விலை கொண்ட 125 சிசி மாடல் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது.

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

இந்த நிலையில், ட்யூக் வரிசையில் சக்திவாய்ந்த மாடலையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது கேடிஎம் நிறுவனம். ஆம். பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரடிப்பாக்கும் விதத்தில், 790 ட்யூக் பைக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

இந்த பைக்குகள் வர இருப்பது குறித்து அரசல் புரசலாக செய்திகள் வந்த நிலையில், தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மும்பை, டெல்லி, ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள டீலர்களுக்கு கேடிஎம் 790 ட்யூக் பைக் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த படங்களையே இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம்.

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

இந்த பைக்கில் இந்தியாவிற்கான தற்காலிக பதிவு எண் பலகை, சாரி கார்டு மற்றும் எஞ்சின் கார்டுகள் இடம்பெற்றிருப்பதால், இது இந்தியாவுக்கான மாடல் என்பதை ஊர்ஜிதமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

இந்த பைக்கின் எஞ்சின் ஆஸ்திரியாவில் இருந்து முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து பொருத்தப்பட இருக்கிறது. இந்த புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் புத்தம் புதிய பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 799 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்: ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் 174 கிலோ எடை கொண்டது. இந்த ரகத்தில் மிக இலகுவான பைக் மாடாலாக இது இருக்கும். அதேசமயத்தில், நம்பகமான, அதி செயல்திறன் மிக்க பைக் மாடலாகவும், சிறந்த பிரேக் சிஸ்டத்துடன் வாடிக்கையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் முன்புறத்தில் 4 காலிபர்களுடன் 300 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் ஃப்ளோட்டிங் காலிபருடன் கூடிய 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. 2 வே குயிக் ஷிஃப்டர், லீன் சென்சிட்டிவ் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் மற்றும் 4 விதமான டிரைவிங் மோடுகளும் இதன் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

MOST READ: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா

டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதற்கு மதிப்பான பல தொழில்நுட்ப அம்சங்களையும், நன்மதிப்பையும் இந்த பைக் வழங்கும்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Under 12 hours ago we brought you news saying our sources told us that the KTM Duke 790 was definitely launching during the festive season. We now have confirmation that display motorcycles have started arriving at dealerships like this one at Bangalore.
Story first published: Saturday, August 24, 2019, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X