கேடிஎம் பைக்குகளின் விலை உயர்ந்தது... முழு விபரம்!
கேடிஎம் பைக்குகளின் விலை அதிகபட்சமாக ரூ.6,5000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பழைய, புதிய விலை விபரங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் 125சிசி மாடல் முதல் 390சிசி மாடல் வரை இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பைக்குகளின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில், கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டட கேடிஎம் 125 ட்யூக் பைக் ரூ.1.18 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே இதன் விலை ரூ.6,000 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.1.24 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் விலை ரூ.2,253 வரையிலும், 250 ட்யூக் பைக்கின் விலை ரூ.3,251 வரையிலும், 390 ட்யூக் பைக்கின் விலை ரூ.4,257 வரையிலும், ஆர்சி200 பைக்கின் விலை ரூ.2,252 வரையிலும், ஆர்சி390 பைக்கின் விலை ரூ.3,256 வரையிலும் அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விலை ரூ.6,416 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால், விலையையும் கணிசமாக உயர்த்தி இருக்கிறது கேடிஎம் நிறுவனம்.

| Model | New Price | Old Price | Hike (in Rs) |
| KTM Duke 125 | 1,24,416 | 1,18,000 | 6,416 |
| KTM Duke 200 | 1,61,421 | 1,59,168 | 2,253 |
| KTM Duke 250 | 1,96,672 | 1,93,421 | 3,251 |
| KTM Duke 390 | 2,47,819 | 2,43,562 | 4,257 |
| KTM RC 200 | 1,89,990 | 1,87,738 | 2,252 |
| KTM RC390 | 2,43,490 | 2,40,234 | 3,256 |

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு கிடைத்த வரவேற்பை மனதில்கொண்டு அதன் ஆர்சி125 என்ற ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலையும் விரைவில் களமிறக்க உள்ளது கேடிஎம். அண்மையில், இதன் சோதனை ஓட்டம் செய்யப்படும் ஸ்பை படங்களும் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இருந்து வரும் மாடல்களை தவிர்த்து, தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் விதத்தில், விரைவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. தவிரவும், 790சிசி பைக் மாடல்களையும் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








