கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

கேடிஎம் பைக்குகளுக்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. கேடிஎம் ட்யூக் மற்றும் ஆர்சி ஆகிய மாடல்கள் இந்திய இளைஞர்களின் கனவு பைக் மாடல்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, ட்யூக் 125 பைக்கின் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய கேடிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கேடிஎம் ஆர்சி குடும்ப வரிசையில் மிக குறைவான விலை மாடலாக ஆர்சி125 என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

தற்போது இந்த மாடல் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விரைவில் விற்பனைக்கு வருவதை உறுதி செய்யும் விதத்தில் கேடிஎம் நிறுவனம் முதல் டீசரை வெளியிட்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

ஆர்சி வரிசையிலான கேடிஎம் பைக்குகளின் டிசைன் தாத்பரியங்களுடன் மிக அசத்தலாக வர இருக்கிறது ஆர்சி125 பைக். கேடிஎம் ட்யூக் 125 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 125 சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.5 பிஎஸ் பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, ட்யூக் 125 பைக்கின் பிரேக் சிஸ்டம்தான் இதிலும் இடம்பெறும். முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: மோடி அரசின் அதிரடி திட்டங்களால் வாகனங்கள் விலை கடுமையாக உயர வாய்ப்பு... எவ்வளவு தெரியுமா?

கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய கேடிஎம் ஆர்சி125 பைக்கில் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, ஆரஞ்ச், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்திலான தனித்துவமான மாடலாக அறிமுகமாக இருக்கிறது.

MOST READ: ஒரே நாள், ஒரே பகுதி: சென்னையில் போலீஸிடம் சிக்கிய 90 ஆயிரம் பேர்... அதிர்ச்சி தகவல்...!

கேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

கேடிஎம் ட்யூக் 125 பைக் ரூ.1.35 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதனை விட சற்றே விலை கூடுதலாக ரூ.1.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ட்யூக் 125 பைக் போன்றே, இந்த பைக்கும் குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM has revealed the first official teaser for the RC125, which is schedule to launch this month.
Story first published: Saturday, June 15, 2019, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X