புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ட்யூக் வரிசையில் 125சிசி, 200சிசி, 250சிசி மற்றும் 373சிசி என நான்கு மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. இந்த நிலையில், ட்யூக் வரிசையில் சக்திவாய்ந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியின் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் தற்போது இந்தியாவிலும் களமிறக்கப்பட இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, வரும் ஜூன் மாதத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ட்யூக் வரிசையில் இப்போது உள்ள 4 மாடல்களுமே சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

ஆனால், புதிய 790 ட்யூக் பைக் மாடலில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 799சிசி எல்சி8 லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎஸ் பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

இந்த புதிய பைக் மாடலில்ல எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

அதேபோன்று, முன்புறத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 300மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கில் சூப்பர்மோட்டோ மோடு வசதியுடன் கூடிய டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, வண்டியின் வேகம், ட்ரிப் மீட்டர், ஓடிய தூரம் மட்டுமின்றி, ஓட்டுபவருக்கு அதிக தகவல்களை பெறும் வாய்ப்பை அளிக்கும்.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்திய அறிமுக விபரம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ரூ.7.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கவாஸாகி இசட்900 மற்றும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். இது நிச்சயம் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பான மாடலாக இருக்கும் என்பதால் விற்பனையிலும் கலக்கும் என தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM is planning to launch power packed Duke 790 bike In India by June 2019.
Story first published: Monday, May 6, 2019, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X