5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

கேடிஎம் நிறுவனம் 5 புதிய 490சிசி பைக் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. சுண்டி இழுக்கும் டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், போட்டியாளர்களை விஞ்சும் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் குறைவான விலை போன்றவை கேடிஎம் நிறுவனத்தின் பைக் மாடல்களுக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

கேடிஎம் நிறுவனம் 125சிசி, 200சிசி, 250சிசி, 373, 690சிசி, 790சிசி, 1,290சிசி என பல்வேறு சிசி திறன் கொண்ட வெவ்வேறு பயன்பாட்டு வகை பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், இந்தியாவில் 790 சிசி வரையிலான மாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

இந்த நிலையில், கேடிஎம் நிறுவனம் 490 சிசி ரகத்தில் 5 புதிய பைக் மாடல்களை இந்தியாவிற்காக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 490 ட்யூக், ஆர்சி 490, 490 அட்வென்ச்சர், 490 சூப்பர்மோட்டோ ஆர்/ சூப்பர்மோட்டோஆர் ஆர் மற்றும் 490 சூப்பர்மோட்டோ டி / என்டியூரோ ஆர் ஆகிய 5 மாடல்களாக உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

இதில், 490 ட்யூக், ஆர்சி490 மற்றும் 490 அட்வென்ச்சர் ஆாகிய மூன்று மாடல்களும் ஒரே ட்ரெல்லிஸ் ஃப்ரேமை பயன்படுத்தி கட்டமைக்கப்பட இருக்கின்றன. இதில், பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் இடம்பெறும் வகையில், ஃப்ரேம் டிசைன் செய்யப்பட்டு இருக்கும்.

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

இதேபோன்று, 490 சூப்பர்மோட்டோ மற்றும் என்டியூரோ பைக் மாடல்களில் ஏற்கனவே சில பைக்குகளில் பயன்படுத்தப்படும் சேஸீயில் சிறிய மாற்றங்களை செய்து பயன்படுத்தப்பட இருக்கின்றன.

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

இந்த புதிய பைக் மாடல்களில் 490 சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. டியூவல் ஓவர்ஹெட் காம்சாஃப்ட்டுகளுடன் 8 வால்வுகள் மற்றும் லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்டதாக இந்த எஞ்சின் வர இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: விமான ரகசியம்... பைலட்களும், கோ-பைலட்களும் ஒரே உணவை சாப்பிட மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

இந்த பைக்குகளில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

MOST READ: டூ வீலர்களுக்கான புதிய நிதியுதவி திட்டம்... எக்கசக்க சலுகைகளுடன் அறிமுகம்!

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

இந்த பைக்குகளில் இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கும். சூப்பர்மோட்டோ என்டியூரோ பைக்குகளின் முன்புறத்தில் லாங் டிராவல் சஸ்பென்ஷன் இடம்பெறும். முன்புறத்திலும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

MOST READ: வந்தாச்சு அடுத்த ஆப்பு: 25 மடங்கு உயரும் மறு பதிவு கட்டணம்... மோடி அரசின் அதிரடி!!!

5 புதிய 490 சிசி பைக் மாடல்களை களமிறக்கும் கேடிஎம்!

வரும் நவம்பர் 5ந் தேதி இத்தாலியின் மிலன் நகரில் துவங்க இருக்கும் ஐக்மா மோட்டார்சை்கிள் கண்காட்சியில் இந்த புதிய கேடிஎம் பைக் மாடல்கள் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: IAB

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Austrian bike maker, KTM is working on five all new 490cc bike models for India.
Story first published: Thursday, September 26, 2019, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X