லம்ப்ரெட்டா ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள்

இத்தாலி நாட்டின் பிரபல ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான லம்ப்ரெட்டா இந்தியாவில் மீண்டும் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்காக மஹாராஷ்டிராவில் புதிய தொழிற்சாலை ஒன்றை துவக்கவும் லம்ப்ரெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

லம்ப்ரெட்டா ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள்

2018ஆம் ஆண்டிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த இந்நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பு வாகனமான ஜி325 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2020ல் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதைக்கு ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயருடன் ஐக்மா கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஜி325 ஸ்கூட்டரில் முழுவதும் புதுமையான மோனோகோயிக் இரும்பால் தயாரிக்கப்பட்ட பக்கவாட்டு பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் சிறிய அளவில் ஸ்மார்ட்டாக உள்ளது.

லம்ப்ரெட்டா ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள்

இதனுடன் முக்கிய அம்சமாக ஜி325 ஸ்கூட்டரில் ரைடர் கால்களை வைக்கும் இடத்தில் லம்ப்ரெட்டா என்ற முத்திரையுடன் போர்டு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரைடர் சாவி கொடுத்து கால்களை அதன் மேல் வைத்தாலே அந்த போர்டில் உள்ள லைட் எரிய ஆரம்பித்து ஸ்கூட்டர் புறப்பட தயாராகிவிடும்.

லம்ப்ரெட்டா ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள்

வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்த்தாலே லம்ப்ரெட்டா நிறுவனத்தின் வழக்கமான டிசைன்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது நன்றாக தெரிகிறது. வழக்கமான டிசைன்களுடன் இண்டிகேட்டர், எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் காற்றை உள்வாங்க முன்புறத்தில் ஏர்-இண்டேக் போன்ற புதிய தொழிற்நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன. ஜே ஜூவான் டிஸ்க் ப்ரேக் இரு சக்கரங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

லம்ப்ரெட்டா ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள்

2018ல் இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக செய்தி மட்டுமில்லாமல் கூடவே, அசெம்பிள் பிளாண்ட் ஒன்றை மும்பையில் துவக்கவுள்ளோம் என்ற செய்தியும் லம்ப்ரெட்டா நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்னோசெண்டி அறிவித்திருந்தது.

ஒரிஜினல் லம்ப்ரெட்டா தயாரிப்புகளுடன் இந்தியா முழுவதும் தயாரிப்புகளை வெளியிட திட்டமிட்டிருக்கும் இந்நிறுவனம் இதனை தொடர்ந்து இத்தகைய பிளான்ட்களை இந்தியா சுற்றியுள்ள நாடுகள் மற்றும் சில ஆப்பிரிக்கா நாடுகளிலும் உருவாக்கவுள்ளது.

லம்ப்ரெட்டா ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள்

புதிய தொழிற்நுட்பங்களுடன் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதே எங்களது நோக்கம் என நடைபெற்று வரும் ஐக்மா நிகழ்ச்சியில் இந்நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read:கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

லம்ப்ரெட்டா ஜி-ஸ்பெஷல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள்

இதுதவிர இந்த ஜி325 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்ற பாகங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. முழு தயாரிப்புகளும் நிறைவடைந்து இந்திய அறிமுகத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எவ்வாறு இருக்கும் என்பதை காண வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Most Read Articles

மேலும்... #லம்ப்ரெட்டா
English summary
Lambretta G-Special e-scooter to debut at Auto Expo 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X