சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனம் ஒன்று உண்மையான தோற்றத்தை இழந்து புது பொலிவு பெற்றிருக்கின்றது. அது எந்த பைக், புதிதாக என்ன சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம்.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

பாரம்பரிய ரகத்திலான வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் ராயல் என்பீல்டு ஓர் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் முற்றிலும் கவர்ச்சியான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பிரபல மாடலை, இருசக்கர வாகனங்களை மாடிஃபை செய்யும் நிறுவனம் ஒன்று கஃபே ரேஸர் ஸ்டைலில் மாற்றியமைத்துள்ளது.

இந்த பைக்கின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்க்கையில், அது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்தானா என்ற கேள்வியை நம்மிடையே கேட்க வைக்கின்ற வகையில், அது கடுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

மேலே உள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கையிலேய அது உங்களுக்கு புரிந்துவிடும். அதேசமயம், புகைப்படத்தில் உள்ள பைக் ராயல் என்பீல்டின் எந்த மாடல் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா... இல்லையென்றால், நாங்களே கூறிவிடுகின்றோம்.

அந்த பைக், ராயல் என்பீல்டு நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ட்வின் மாடல்களில் ஒன்றான கான்டினென்டல் ஜிடி 650தான் அது.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

இந்த கடுமையான மாற்றத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த க்ரோம் ஒர்க்ஸ் கராஜ் நிறுவனம்தான், கான்டினென்டல் ஜிடி 650 மாடலுக்கு வழங்கியுள்ளது.

மேலும், தற்போது மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்கிற்கு அந்நிறுவனம் 'தி 30' என்ற பெயரை வைத்துள்ளது. அத்துடன், தற்போது நடைபெற்று வரும் 'கஸ்டம் ஃபெஸ்ட்' கண்காட்சியில் அந்த பைக்கை அது அறிமுகம் செய்துள்ளது.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

கஸ்டம் என்பது உலகளாவிய அளவில் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களுக்காக நடைபெறும் வாகன கண்காட்சியாகும். இதில், உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும், மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தேனேசியாவில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு 'பேக் டு தி ரூட்ஸ்' என்ற மற்றுமொரு பெயரும் உள்ளது. இதற்கு 'மீண்டும் பழைய வழியில்' என்று அர்த்தம்.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

இந்த பெயருக்கு ஏற்ப தோற்றத்தை ராயல் என்பீல்டு மாடிஃபை செய்யப்பட்ட கான்டினென்டல் ஜிடி 650 (தி 30) பெற்றிருக்கின்றது. ஏனென்றால், இந்த பைக் 60-களில் காணப்பட்ட கஃபே பந்தய மோட்டார்சைக்கிள்களின் உத்வேகத்தைப் பெற்றிருக்கின்றது.

அந்தவகையில், கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் எஞ்ஜினைத் தவிர மற்ற அனைத்து பாகங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

ஹேண்டில் பார் முதல் சைலென்சர், இருக்கை என அனைத்து பாகங்களும் பழைய கஃபே ரேஸர் வாகனங்களுக்கு இணையானதாகப் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட கான்டினென்டல் ஜிடி 650-யின் புகைப்படங்கள், அது சந்தித்த அனைத்து கஸ்டமைஸ் பணிகளையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

கான்டினென்டல் ஜிடி650 பைக்கின், முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த வட்டவடிவிலான ஹெட்லைட் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு நிஃப்டி ஏரோடைனமிக் கௌல் பொருத்தப்பட்டுள்ளது. இது சவாரி செய்யும் வளைவு நிலைப்பாட்டோடு தடையின்றி இணைகிறது.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

தொடர்ந்து, பின்புற சட்டங்கள் குறுகியதாகவும், மெலிந்ததாகவும் மாற்றிமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எரிபொருள் தொட்டி, பேரிங், சைட் பேனல்கள், முன் ஃபெண்டர் மற்றும் ஹார்னெட் உள்ளிட்டவை தனிப்பயனாக்கப்பட்ட எஃகு கால்வனைஸ்ட் பகுதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

MOST READ: புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

இத்துடன், பைக்கின் இருக்கைகள் மாற்றப்பட்டு பிரத்யேக சொகுசு அமைப்புக் கொண்ட லெதர் இருக்கைப் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோ மீட்டரும் கோஷோ இஎஃப்ஐ மல்டிமீட்டராக மாற்றப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஸ்விங் ஆர்ம், ட்யூவல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்சாஸ்ட், பில்லட் அலுமினிய ஃபுட் பெக்குகள், அலுமினிய கிளிப்-ஆன் ஹேண்டில்பார், அலுமினியம்-லெதர் ஹேண்ட்கிரிப் மற்றும் வெலோசிட்டி ஸ்டேக் காற்று வடிகட்டி உள்ளிட்ட பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

இதேபோன்று, சஸ்பென்ஷன், பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஸ்போக் வீல்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன.

ஆனால், இதன் எஞ்ஜின் மட்டும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், ஜிடி 650 பைக்கின் 648 சிசி திறன் கொண்ட ஆயில் கூல்ட், பேரல்லல் ட்வின் எஞ்ஜின் காணப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரை 7,250 ஆர்பிஎம்மிலும், 52என்எம் டார்க்கை 5,250 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும்.

சத்தியமா, இது ராயல் என்பீல்டு பைக்தான்... முடிஞ்சா என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள்!!!

தற்போது செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களால் பைக்கின் எடை கணிசமாக குறைந்துள்ளது. ஆகையால், இதன் திறன் வெளிப்பாட்டில் சிறு மாற்றங்கள் காணப்படாலம் என தெரிகின்றது.

அதேசமயம், இந்த கடுமையான மாற்றங்களால் பைக்கின் மதிப்பும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Most Read Articles
English summary
Modified Royal Enfield Continental GT 650 Unveiled At KustomFest. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X