வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

அதிக எரிபொருள் சிக்கனம் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

இந்தியாவில் விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர். சந்தைப் போட்டி அதிகரித்து வருவதற்கு ஏற்ப அவ்வப்போது புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிய அம்சங்களுடன் கூடிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

இதைத்தொடர்ந்து, தற்போது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் 6ம் தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக ரஷ்லேன் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு பிஎஸ்- 6 மாசு உமிழ்வு விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

இதற்கு தக்கவாறு புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் முக்கிய அம்சமாக, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலமாக, மாசு உமிழ்வு குறைவாக இருக்கும்.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

அத்துடன், தற்போதைய மாடலைவிட 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் திறனுடன் புதிய மாடல் வர இருக்கிறது. இதன்மூலமாக, லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தரும் விதத்தில் புதிய மாடல் வரும் என்பது எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் இருக்கும் 110சிசி HET தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எனினும், புதிய ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினின் திறனில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பொசிஷன் லைட்டுகள், டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 18 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி, யுஎஸ்பி சார்ஜர், க்ரோம் அலங்கார ஆக்சஸெரீகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரில் ஸ்பிரிங் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இருசக்கரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வாகனத்தை விரைவாகவும், நிலையாகவும் நிறுத்தும் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

வருகிறது அதிக மைலேஜ் தரும் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்!

கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டை மிகப்பெரியதொரு இடத்தை ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தக்க வைத்து வருகிறது. அடுத்த ஆண்டு வரும் புதிய ஆக்டிவா 6ஜி மாடலும் முதன்மை இடத்தை தக்க வைக்க உதவும் என்று நம்பலாம்.

Source: Rushlane

Most Read Articles

English summary
Honda Motorcycles and Scooters India (HMSI) is planning to introduce a new Activa model in the market soon. The new Honda Activa will come with a fuel-injection system and will be compliant with the upcoming emission norms.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X