அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய மோட்டார்சைக்கிளை பாங்காக்கில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. பைக் குறித்த சில முக்கியமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

ஜப்பானை தலைமையமாகக்கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தனது தயாரிப்புகளை இந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது பாங்காக்கில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சியில் தனது புத்தம் புதிய ஹோண்டா சிபி150ஆர் ஸ்ட்ரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

இந்த புத்தம் புதிய சிபி150ஆர் பைக்கானது, நியோ ரெட்ரோ ஸ்டைலில் வெளிவந்த சிபி300ஆர் பைக்கின் சிறப்பம்சங்களைக் கொண்டு தயாராகி உள்ளது. இதன் வண்ணக் கலவை அனைவரையும் கவரும் மிகவும் கவர்ச்சியான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் பிரேக்குகளுக்கு சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

மேலும், மோட்டார் சைக்கிளின் தோற்றத்தைப் பார்ப்போமானால், மிகவும் அசத்தலாக ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அதன் சைலென்சர் வடிவமைப்பே சாட்சியாக இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளை இதற்கு முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில் 150எஸ்எஸ் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு விட்டது.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

இந்நிலையில், இந்த கான்செப்ட் மாடலை ஹோண்டாவின் சிபி300ஆர் மாடலின் சில அம்சங்களைக் கொண்டு உருவாக்கி சிபி150ஆர் என்ற புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் மோட்டார் சைக்கிளில் 149சிசி டிஓஎச்சி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மோட்டார்சைக்கிளின் மற்ற பவர் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

மேலும், ஹோண்டாவின் சிபி150ஆர் பைக்கின் முன்பக்கத்தில் 41எம்எம் கொண்ட அப்சைட்-டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோசாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்விதமாக முன்பக்கத்தில் 296எம்எம் மற்றும் பின்பக்கத்தில் 220எம்எம் டிஸ்க் பிரேக்குகள் டியூவல் ஏபிஎஸ் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

இந்த புதிய மாடல் மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவிலான எல்இடி முகப்பு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது, மோட்டார்சைக்கிளுக்கு நியோ ரெட்ரோ லுக்கைக் கொடுக்கிறது. இத்துடன், இந்த சிபி150ஆர் பைக்கில் முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் சிபி300ஆர் மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் ரூ.2.41 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.

அட்டகாசமான லுக்கில் வெளிவந்த ஹோண்டாவின் புதிய சிபி150ஆர் பைக்: இந்தியாவில் விற்பனை எப்போது...?

மேலும், இந்த புத்தம் புதிய சிபி150ஆர் வருகின்ற ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பாங்காக்கில் அறிமுகமாகி இருக்கிற இந்த மோட்டார்சைக்கிளை 2.16 லட்சம் ரூபாய் என்ற இந்திய மதிப்பில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
2019 Honda CB150R Streetster Unveiled — Will It Makes Its Way To India?. Read In Tamil.
Story first published: Saturday, March 30, 2019, 16:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X