TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு எகிடுதகிடான வரவேற்பு!
அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவில் 300 - 400 சிசி இடையிலான ரக பைக் மாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. எனவே, இந்த செக்மென்ட்டில் ஏராளமான பைக் மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய 300சிசி பைக் மாடலை கடந்த 8ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி உள்ளது.
ஹோண்டா சிபி300ஆர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த பைக் பாரம்பரிய டிசைனுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய பைக் மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
"தற்போது திட்டமிடப்பட்டுள்ள உற்பத்தி இலக்கின்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு சிபி300ஆர் பைக்கிற்கு முன்பதிவு முடிந்துவிட்டது," என்று ஹோண்டா நிறுவன அதிகாரி யத்விந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.
அதாவது, இதுவரை 400 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் டெலிவிரி துவங்கப்பட இருக்கிறது.
ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எல்இடி ஹெட்லைட், குதிரை குளம்பு வடிவிலான கெய்டு லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. நேர்த்தியாக செதுக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் பைக்கிற்கு வலிமையான தோற்றத்தை தருகிறது.
இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சூரிய ஒளி நேரடியாக படும்போது கூட தெளிவாக பார்க்கக்கூடிய வாய்ப்பை இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கும்.
இந்த பைக்கில் மிகச் சிறப்பான ஹேண்டில்பார் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 40 டிகிரி கோணத்தில் திரும்பும்போது கூட, உடனடியாக பைக்கை நிலைத்தன்மைக்கு கொண்டு வரமுடியும். இதற்கு ஐஎம்யூ சாதனமும் உதவி புரிகிறது.
டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பீக் ஹோல்டு ஃபங்ஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் உள்ளன. இந்த பைக் 151 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதுடன், 143 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.
ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் 17 அங்குல டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக்அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 296 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபருடன் கூடிய 220 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.
புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் 30.9 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 286சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
ரூ.2.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. விலை மற்றும் எஞ்சின் சிசி அடிப்படையில் இந்த புதிய பைக் பஜாஜ் டோமினார், பிஎம்டபிள்யூ ஜி310ஆர், கேடிஎம் 390 ட்யூக், கவாஸாகி நின்ஜா 300, ராயல் என்ஃபீல்டு 650 பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.