புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய ஹோண்டா கோல்டுவிங் டூரர் பைக் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள், சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவான அம்சங்களை பெற்ற டூரர் வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் புதிய ஹோண்டா கோல்டுவிங் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. இந்த உயர் வகை மாடலானது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 2020 மாடலாக வர இருக்கும் புதிய கோல்டுவிங் டூரர் மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் டோக்கியோ மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த பிரம்மாண்டமான மோட்டார்சைக்கிளில் பல்வேறு கூடுதல் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த பைக்கில் பயன்படுத்தப்படும் ஆறு சிலிண்டர்கள் கொண்ட 1,883 சிசி எஞ்சின் யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, இதன் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த சக்திவாய்ந்த ராட்சத எஞ்சின் அதிகபட்சமாக 126 எச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளதை போன்றே, இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்திலான இந்த டிசிடி கியர்பாக்ஸ் அதிர்வுகள் குறைவாகவும் மற்றும் மென்மையான கியர் மாற்றத்தை உறுதி செய்யும்.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளின் விலை உயர்ந்த டூர் வேரியண்ட்டில் ஏர்பேக் மற்றும் டாப் பாக்ஸ் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்த வேரியண்ட்டின் சஸ்பென்ஷன் மிகச் சிறப்பான மாற்றங்களுடன் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். குறிப்பாக, இரண்டு பேர் பயணம் செய்யும்போது சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் வருகிறது. அத்துடன், எல்இடி ஹெட்லைட், எல்இடி பனி விளக்குகள், 7.0 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: 83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

அதாவது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி மற்றும் மேடான சாலைகளுக்கு ஏதுவாக ஆட்டோமேட்டிக் மாடலில் க்ரீப் எனப்படும் வசதி உள்ளது. ஆக்சிலரேட்டர் கொடுக்காமலேயே, பிரேக்கை லேசாக விடும்போது மோட்டார்சைக்கிள் குறிப்பிட்ட வேகத்தில் மெதுவாக நகர்ந்து செல்லும். இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிளில் பின்புறமாக நகர்த்துவதற்கு ஏதுவாக ரிவர்ஸ் கியர் வசதியும் உள்ளது.

MOST READ:பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளில் புதிய சேஸி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்த புதிய மாடலின் சேஸீ மிகவும் இலகுவாகவும், உறுதித்தன்மை அதிகம் மிகுந்ததாகவும் இருக்கும். பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளில் இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. டிசிடி வேரியண்ட்டில் மேட் பிளாக் மெட்டாலிக் என்ற வண்ணத் தேர்வும், டூர் டிசிடி வேரியண்ட்டில் பியர்ல் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Japanese two-wheeler maker, Honda has unveiled the 2020 Goldwing at the 2019 Tokyo Motor Show.
Story first published: Monday, October 28, 2019, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X