ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

ஜாவா பைக் பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருக்கும் பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா பிராண்டில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களை மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஜாவா, ஜாவா 42 மற்றும் பெராக் ஆகிய மூன்று மாடல்களில் பெராக் மட்டும் சந்தைக்கு கொண்டு வரப்படவில்லை.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

கடந்த ஆண்டு இறுதியில் ஜாவா, ஜாவா 42 ஆகிய இரண்டு மாடல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதுடன், பெரிய அளவிலான வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. ஆனால், டெலிவிரி மிகவும் தாமதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

இந்த நிலையில், உற்பத்தி திறன் போதிய அளவு இல்லாததால், ஜாவா பெராக் பைக்கை சந்தைக்கு கொண்டு வராமல் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் மவுனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில், ஜாவா நிறுவனம் இந்தியாவில் கால் பதித்து வரும் 15ந் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவு பெற இருக்கிறது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

அன்றைய தினத்தில் புதிய பெராக் பைக்கை விற்பனைக்கு களமிறக்க ஜாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வரும் 15ந் தேதி ஜாவா நிறுவனம் புதிய பைக் மாடல் அறிமுகத்திற்கான அழைப்பை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், பெராக் மோட்டார்சைக்கிளின் டீசருடன் புதிய அத்யாயத்தில் அடியெடுத்து வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

புதிய ஜாவா பெராக் பைக் பிரம்மாண்டத் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஜாவா, ஜாவா 42 மாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. வலிமையான ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், எஞ்சின் பகுதியுடன் ஒற்றை இருக்கை கொண்ட பாபர் வகை மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

MOST READ:அதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்!

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

ஜாவா ஸ்டான்டர்டு மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களில் 293 சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஜாவா பெராக் பைக்கில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றஇருக்கும். மேலும், இது பிஎஸ்-6 எஞ்சினுடன் வர இருப்பதாகவும் தெரிகிறது.

MOST READ:ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

ஜாவா, ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களில் எம்ஆர்எஃப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளில் பைரெல்லி டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கும். முன்புறத்தில் 18 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் உள்ளன. இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

MOST READ:மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டபோது இந்த பைக்கிற்கு ரூ.1.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிஎஸ்-6 எஞ்சினுடன் வர இருப்பதால், விலை ரூ.2 லட்சத்தை ஒட்டி நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa has sent media invitation and revealed the launch of new Perak motorcycle on 15th November.
Story first published: Wednesday, November 6, 2019, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X