புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது. ரூ.1.50 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று விலை விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. ரூ.10.69 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

கவாஸாகி நின்ஜா 1000 பைக்கின் அடிப்படையிலான இந்த பைக் அட்வென்ச்சர் டூரர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட தூர பயணங்களின்போது உற்சாகமான, அயர்வு இல்லாத பயணத்தை வழங்கும் விதத்தில் இருக்கை அமைப்பு, ஹேண்டில்பார் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அலுமினியம் ட்வின் ட்யூப் ஃப்ரேம் மற்றும் இதன் சஸ்பென்ஷன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய விண்ட்ஸ்கிரீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உயர்ரக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் ரேடியல் மவுண்ட் பிரேக் காலிபர்கள் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சம். இந்த பைக்கில் 21 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

வளைவுகளில் திரும்பும்போது நிலைத்தன்மை குலையாமல் செல்வதற்கு உதவும் கவாஸாகி கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், கவாஸாகி டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கவாஸாகியின் ஆன்ட்டி லாக் பிரேக் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,043 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 102 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர நிலைகளில் சிறப்பான டார்க் திறனை வழங்கும் விதத்தில் இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய பைக் ஸ்டார்டஸ்ட் ஒயிட் மற்றும் மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
All New Kawasaki Versys 1000 Bike Launched In India.
Story first published: Tuesday, February 12, 2019, 15:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X