புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

முற்றிலும் தலைமுறை மாடலாக புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் படங்கள், சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இங்கிலாந்து நாட்டின் ஹிங்க்லே பகுதியில் உள்ள ட்ரையம்ஃப் தொழிற்சாலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

தற்போது விற்பனையில் உள்ள ட்ரையம்ஃப் டைகர் 800 பைக் மாடலானது எக்ஸ்ஆர் மற்றும் எக்ஸ்சி என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய டைகர் 900 பைக் 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

முழுமையான ஆஃப்ரோடு சாகச பயன்பாட்டு அம்சங்கள் கொண்டதாக புரோ என்ற வேரியண்ட்டிலும், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாகவும், சிறிய அளவிலான ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற ஜிடி என்ற கிராண்ட் டூரர் ரக வேரியண்ட்டிலும், சாதாரண டைகர் 900 என்ற பேஸ் வேரியண்ட்டிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 888 சிசி எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய மாடலின் எஞ்சினைவிட 10 சதவீதம் கூடுதல் டார்க் திறனை இந்த புதிய எஞ்சின் வெளிப்படுத்தும். அதேநேரத்தில், தற்போதைய மாடலின் எஞ்சின் வெளிப்படுத்தும் அதே 94 பிஎச்பி பவரையே புதிய எஞ்சினும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. டைகர் 900 பைக் எஞ்சின் அதிகபட்சமாக 87 என்எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய டைகர் 900 பைக்கின் எஞ்சின் பவர் டெலிவிரி மிக துல்லியமாகவும், சிறப்பாகவும் இறுக்கும் என்று ட்ரையம்ஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, குறைவான வேகத்தில் இரண்டு சிலிண்டர் எஞ்சின் பைக்குகளுக்குரிய செயல்திறன் பண்புகளையும், நடுத்தர மற்றும் அதிவேகத்தில் செல்லும்போது மூன்று சிலிண்டர் எஞ்சின் திறன் முழுவதையும் காட்டும் பண்புகளையும் பெற்றிருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இந்த புதிய டைகர் 900 பைக் மாடல்களில் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் ரைடிங் மோடுகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெயின், ரோடு, ஸ்போர்ட், ஆஃப்ரோடு மற்றும் ஓட்டுபவரின் விருப்பத்திற்கு ஏற்ப எஞ்சின் செயல்திறனை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த பைக் வழங்கும். ஆனால், வேரியண்ட்டை பொறுத்து இந்த ரைடிங் மோடுகள் வேறுபடுகின்றன.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக்கில் பேக்லிட் எனப்படும் மெல்லிய பின்னணி ஒளியுடன் கூடிய பொத்தான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்டுகளில் 7.0 அங்குல வண்ண டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பும், பேஸ் வேரியண்ட்டில் 5.0 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் உள்ளன, க்ரூஸர் கன்ட்ரோல் சிஸ்டம், வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

டாப் வேரியண்ட்டுகளில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை உரிமையாளரின் ஸ்மார்ட்ஃபோனுடன் புளூடூத் மூலமாக இணைப்பதற்கான பிரத்யேக செயலியையும் ட்ரையம்ஃப் வழங்குகிறது. இதன் மூலமாக, ஹேண்ட்ஸ்ஃப்ரீ முறையில் போன் அழைப்புகளை பேச முடியும். அத்துடன், எம்பி3 பாடல்களை தேர்வு செய்வது, டர்ன் பை டர்ன் வழிகாட்டு வசதிகளையும் பெற முடியும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

மேலும், டாப் வேரியண்ட்டுகளில் ட்ரையம்ஃப் ஷிஃப்ட் அசிஸ்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக க்ளட்ச் பிடிக்காமல் கியரை அதிகரிக்கவும், குறைப்பதற்குமான எளிய வழியையும் உரிமையாளர்கள் பெற முடியும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

டைகர் 900 ஜிடி புரோ வேரியண்ட்டில் மார்சோச்சி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய பின்புற சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பாரின் இடதுபக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் சுவிட்ச் மூலமாக சஸ்பென்ஷன் அமைப்பை விருப்பம்போல் மாற்ற முடியும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

மிக விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஷோவா அட்ஜெஸ்ட்டபிள் சஸ்பென்ஷனும், சாதாரண வேரியண்ட்டில் மேனுவல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய மர்சோச்சி சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

அனைத்து வேரியண்ட்டுகளிலும் பிரெம்போ ஸ்டைல்மா 4 பிஸ்டன் மோனோபிளாக் காலிபர்கள் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளன. இந்த பைக்கில் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அடிச்சட்டமும், அலுமினிய துணை அடிச்சட்டத்தின் துணையுடன் இந்த பைக் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!

இங்கிலாந்தில் 9,500 பவுண்ட்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.8.85 லட்சம்) விலையில் புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
British premium bike maker, Triumph Motorcycles has unveiled the new Triumph Tiger 900 at a event in Hinckley, UK.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X