பவர்ஃபுல்லான புதிய எஞ்சினுடன் புதிய யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்!

யமஹா ஃபஸினோ ஸ்கூட்டரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 125சிசி எஞ்சினுடன் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான ஸ்கூட்டர் தேர்வாக இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் 110 சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தது.

இதுவரையில் யமஹா ஃபஸினோ ஸ்கூட்டரில் 113 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 113 சிசி மாடலுக்கு மாற்றாக, இன்று புதிய 125 சிசி எஞ்சினுடன் யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரான எஞ்சினுடன் வந்துள்ளது.

புதிய யமஹா ஃபஸினோ 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

Image Courtesy: aiymrc/Instagram

புதிய யமஹா ஃபஸினோ 125 ஸ்கூட்டர் 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஸ்டான்டர்டு டிரம் பிரேக் வேரியண்ட், ஸ்டான்டர்டு டிஸ்க் பிரேக் வேரியண்ட், டீலக்ஸ் டிரம் பிரேக் வேரியண்ட் மற்றும் டீலக்ஸ் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய யமஹா ஃபஸினோ 125 ஸ்கூட்டரில் 125சிசி புளூகோர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பெற்றிருக்கிறது. அதிகபட்சம் 8 பிஎச்பி பவரையும், 9.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 58 கிமீ மைலேஜை வழங்கும். பழைய 113 சிசி எஞ்சினைவிட இந்த புதிய 125 சிசி எஞ்சின் 30 சதவீதம் கூடுதல் பவரை வெளிப்படுத்தும். அதேபோன்று, மைலேஜ் 16 சதவீதம் கூடுதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஃபஸினோ 125 ஸ்கூட்டரில் அகலமான புதிய இருக்கைகள், 21 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் ஸ்டோரேஜ், மல்டி ஃபங்ஷன் கீ அம்சங்களை பெற்றிருக்கிறது. சைலென்ட் ஸ்டார்ட் வசதியும் இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சமாக இருக்கும்.

புதிய யமஹா ஃபஸினோ 125 ஸ்கூட்டரில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கிறது.

MOST READ: பஜாஜ் சேத்தக் வாங்க வெயிட் பண்றீங்களா?... முதல்ல இந்த நல்ல செய்திய படிங்க!

இந்த ஸ்கூட்டரின் டிரம் பிரேக் வேரியண்ட்டுகள் சுவே காப்பர், டார்க் மேட் புளூ, சியன் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட்டுகள் விவிட் ரெட் மற்றும் யெல்லோ காக்டெயில் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

MOST READ: பேருந்தின் மீது தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்... விநோத தண்டனையை வழங்கிய ஊர் மக்கள்... வைரல் வீடியோ..?

புதிய யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.66,930 விலையிலும், ஸ்டான்டர்டு டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.68,930 விலையிலும், டீலக்ஸ் டிரம் வேரியண்ட் ரூ.67,430 விலையிலும், டீலக்ஸ் டிஸ்க் வேரியண்ட் ரூ.69,930 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ ஸ்கூட்டருடன் நேரடியாக மோதுகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Motor India has introduced the Fascino 125 FI scooter in India and it's priced from Rs.66,430, going up to Rs.69, 930 (all prices, ex-showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X