பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், எஞ்சின் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

பட்ஜெட் விலையிலான ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா ஆர்15 பைக்தான் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. சூப்பர் பைக் போன்ற டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான பட்ஜெட்டில் கிடைப்பதே இதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதற்கான காரணங்களாக உள்ளன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்த நிலையில், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகராக இந்த பைக்கின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்காக எஞ்சினில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இதன் பவர் மற்றும் டார்க் திறன் குறைந்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-4 மாடலில் இதன் எஞ்சின் 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பிஎஸ்-6 எஞ்சின் அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பின்சக்கரத்தில் ரேடியல் டயர்கள் உள்ளன. சைடு ஸ்டான்டு இருந்தால் எஞ்சின் ஸ்டார்ட் செய்ய முடியாத வசதி, டியூவல் ஹாரன் ஆகியவை நிரந்தர அம்சங்களாக உள்ளன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக் ரேஸிங் புளூ, தண்டர் க்ரே மற்றும் டார்க்நைட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ரேஸிங் புளூ வண்ணத்தில் சக்கரங்கள் நீல வண்ண பெயிண்ட் செய்யப்பட்டு கிடைக்கும்.

Most Read: கேடிஎம் 250 ட்யூக்கிற்கும் ஹஸ்க்வர்ணா 250 பைக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.1.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-4 மாடலைவிட ரூ.4000 கூடுதல் விலையில் பிஎஸ்-6 மாடல் வந்துள்ளது.

Most Read: சஸ்பென்ஷனை பதம் பார்க்கும் ஸ்பீடு பிரேக்கர்கள்... அதிர்ச்சி தகவல்!

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய யமஹா ஆர்15 வி3.0 பைக்கிற்கு நாடு முழுவதும் உள்ள டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha R15 with BS-6 Complaint Engine launched in India
Story first published: Monday, December 9, 2019, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X