ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா மின்சார ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்காக ஃபேம் என்ற பெயரில் மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஃபேம்-1 திட்டம் கடந்த 2015ம் ஆண்டு துவங்கி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 1 முதல் மின்சார வாகனங்களுக்கான இரண்டாவது கட்ட மானியம் வழங்கும் திட்டம் ஃபேம்-2 செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

இந்த நிலையில், ஃபேம்-2 திட்டத்தில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் பெறும் விதிகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், சாதாரண பேட்டரி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மானியம் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

இந்த நிலையில், அதிக திறன் வாய்ந்த பேட்டரியை பயன்படுத்தும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மானியம் போதிய அளவில் கிடைப்பது தெரிய வந்துள்ளது. அதன்படி, ஃபேம்-2 திட்டத்தின் கீழ் ஒகினவா மின்சார ஸ்கூட்டர்கள் மானியம் பெற தகுதியுடைய மாடல்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

அதன்படி, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ.17,000 மானியம் பெற இயலும். இந்த ஸ்கூட்டர் ரூ.79,290 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், மானிய கழிவு போக, ரூ.62,290 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரைவிட (ரூ.64,838) விலை குறைவானதாக மாறி இருக்கிறது.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

இதேபோன்று, ஒகினவா ஐ-பிரெய்ஸ் ஸ்கூட்டர் ரூ.1,14,920 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் விலையில், இந்த மாடலுக்கு ரூ.26,000 மானியம் வழங்கப்படுகிறது. இதனால், இந்த ஸ்கூட்டர் ரூ.88,920 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

மின்சார ஸ்கூட்டர்களுக்கு நேரடி மானியம் தவிர்த்து, இலவச பார்க்கிங் வசதி மற்றும் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட இதர சலுகைகளும் அளிக்கப்படுகிறது. இதனால், பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவில், அதிக சேமிப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

ஒகினவா ஐ- பிரெய்ஸ் மின்சார ஸ்கூட்டரில் பிஎல்டிசி வாட்டர்புரூஃப் வசதி கொண்ட 72V மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 2.9 kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்படுகிறது. முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். பேட்டரியை மட்டும் தனியாக கழற்றி சார்ஜ் செய்து மீண்டும் பொருத்தலாம்.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் பிடிக்கும். பிரேக் பிடிக்கும்போது பேட்டரியை சார்ஜ் செய்யும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. ஜியோ ஃபென்சிங் வசதியுடன் கூடிய ஜிபிஎஸ் சிஸ்டமும் உள்ளது.

ஃபேம் திட்டத்தின் கீழ் ஒகினவா ஸ்கூட்டர்கள் மீது ரூ.26,000 வரை மானியம்!

ஒகினவா ரிட்ஜ் ப்ளஸ் ஸ்கூட்டரில் 1,200 வாட் வாட்டர்புரூஃப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 55 கிமீ வேகம் வரை செல்லும். இந்த மாடலில் 1.75 kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் பிடிக்கும். இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் ஸ்மார்ட்போனை இணைத்து பல்வேறு தகவல்களை பெற முடியும்.

Most Read Articles
மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Scooters Elgible For To Get FAME-II subsidies.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X