உலகையே திரும்பி பார்க்க வைக்க உள்ள இந்திய தயாரிப்பு: ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்கலாம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக டிரைக் ரக எலக்ட்ரிக் பைக்கை பெங்களூருவைச் சார்ந்த ஓர்க்ஸா எனர்ஜிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக்

பெட்ரோல், டீசல் வாகனங்களினால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கும் விதமாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதனால், எரிபொருள் வாகனங்களைத் தொடர்ந்து தற்போது மின்சார வாகனங்களின் புரட்சி உலகமெங்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தங்களது முனைப்பைக் காட்ட தொடங்கியுள்ளன. இந்நிலையில், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர்க்ஸா எனர்ஜிஸ் நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே மின்சாரம் சார்ந்த தொழில்நுட்பப் பொருட்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது.

மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக்

இதையடுத்து, தற்போது பேட்டரியால் இயங்கும் டிரைக் எனப்படும் மூன்று சக்கர பைக்கைத் தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்து தயாராகி வரும் இந்த பைக் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. மேலும், இது இந்தியாவில் தயாராகும் முதல் டிரைக் பைக்காகும்.

மாண்டிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பைக் முழுக்க முழுக்க பேட்டரியால் மட்டுமே இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய மாண்டிஸ் பைக் ஸ்லீக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக் மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்லும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 200 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக்

மேலும், இந்த பைக்கில் உள்ள பேட்டரிகள் சார்ஜ் தீர்ந்துவிட்டால், சார்ஜிங் ஸ்டேஷனைத் தேடிச்சென்ற சார்ஜ் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அந்த பைக்கின் பேட்டரிகள் செல்போன் பேட்டரியை மாற்றிக் கொள்வதைப் போல் பைக் பேட்டரியையும் மாற்றிக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்ய குறைந்தது ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த பைக்கில் அவ்வாறு இல்லாமல் உடனடியாக பேட்டரியை மாற்றிக் கொண்டு செல்லலாம்.

மாண்டிஸில் பொருத்தப்பட்டுள்ள எஞ்ஜினின் டார்க்யூவானது RPM-ஐ பொருத்து இயங்கவில்லை. எஞ்ஜினின் இயக்கம் தொடங்கியதும் டார்க்யூ திறன் வெளிப்பட ஆரம்பித்துவிடும். மேலும், அதீத சக்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு திறனுள்ளது.

மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக்

ஓர்க்ஸா எனர்ஜிஸ் இந்த பைக்கின் அறிமுகத் தேதி மற்றும் விலை உள்ளிட்ட தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த மாண்டிஸ் பைக் இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பக்கம் இரு சக்கரங்களைக் கொண்ட இந்த மாண்டில் பைக் இந்திய பைக் சந்தையில் தயாரிக்கப்படும் முதல் டிரைக் ரக பைக்காகும். இதன் முன்பக்கத்தில் இருசக்கரங்களும், பின்பக்கத்தில் ஒரு சக்கரம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் முன்ன பக்கம் உள்ள இரண்டு சக்கரங்களும் பைக்கின் சமநிலையை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாராகி வரும் இந்த பைக், தொழில்நுட்பத்தின் புரட்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக்

முன்னதாக பெங்களூருவைச் சார்ந்த ஏத்தர் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. அதேநேரம் அந்த நிறுவனம் அதன் பைக்குகளை பெங்களூருவில் மட்டுமே விற்பனைச் செய்து வருகிறது. தொடர்ந்து தற்போது தான் மற்ற மாநிலங்களில் விற்பனையைத் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாண்டிஸே பைக்குகள் சந்தையில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களுடன் கடுமையான பேட்டியை சந்திக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

source: cartoq

Most Read Articles
English summary
Orxa Energies Is Building India's First Trike Bike. Read In Tamil.
Story first published: Friday, February 8, 2019, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X