முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

பீஜோ நிறுவனத்தின் மேக்ஸி ரக ஸ்கூட்டர் முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது. ஸ்பை படங்கள் மற்றும் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ இருசக்கர வாகன நிறுவனத்தை இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது அறிந்ததே. இந்த நிலையில், பீஜோ நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல்களை மஹிந்திரா நிறுவனம் இந்தியா கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், பீஜோ நிறுவனத்தின் பல்சன் என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் முதல்முறையாக தரிசனம் கொடுத்திருக்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இது மேக்ஸி ரக ஸ்கூட்டர் என்பதால், தோற்றத்தில் ஆளுமையாகவும், பிரம்மாண்டமாகவும் தெரிகிறது.

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பீஜோ பல்சன் ஸ்கூட்டரின் 125 சிசி மாடலாக இது இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, சுஸுகி பர்க்மேன் 125 ஸ்ட்ரீட் மாடலுக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

பிரான்ஸ் நாட்டில் இந்த ஸ்கூட்டர் அலூர், ஆக்டிவ் மற்றும் ஆர்எஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பீஜோ நிறுவனத்தின் பெரிய லோகோ, தனித்துவமான டெயில் லைட்டுகள் உள்ளன.

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

இந்த புதிய ஸ்கூட்டரில் டிஎஃப்டி வண்ணத் திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஐ-கனெக்ட் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்மார்ட்ஃபோன் செயலியுடன் இணைத்து பல்வேறு தகவல்களை பெற முடியும். மேலும், நேவிகேஷன், ஃபோனில் வரும் குறுந்தகவல்களை பார்ப்பதற்கான வாய்ப்பையும் இந்த திரை வழங்கும்.

MOST READ: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு! இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக்

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

இந்த ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 125 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.6 எச்பி பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் பிரம்மாண்டத் தோற்றத்திற்கு தக்க செயல்திறனை இதன் எஞ்சின் வெளிப்படுத்தும்.

MOST READ: புதிய பேருந்துகளை வாங்கிய கையோடு திருப்பி அனுப்பிய மாநில அரசு... இதற்காகதான் ரிட்டன் கொடுத்தாங்களா...?

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

புதிய பீஜோ பல்சன் ஸ்கூட்டரில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. வெளிப்புறத்தில் எரிபொருள் டேங்க் மூடி, பொருட்களை வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதிகள், முழுமையான ஹெல்மெட் வைப்பதற்கான இடவசதிகளும் உள்ளன.

MOST READ: மாருதி பலேனோ என்ன ஆகப்போகுதோ? செக் வைக்க வருகிறது டாடா அல்ட்ராஸ்... ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!!

முதல்முறையாக பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்

புதிய பீஜோ பல்சன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எனினும், நிச்சயம் இந்த பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா பரிசீலிக்கும் என நம்பப்படுகிறது. தற்போது இந்த ஸ்கூட்டர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பீஜோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

Source: ACI

Most Read Articles

மேலும்... #பீஜோ #peugeot
English summary
The Peugeot Pulsion maxi scooter has spotted undistinguished place in India for the first time.
Story first published: Tuesday, December 17, 2019, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X