இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் போலாரிட்டி நிறுவனம், பைக்கிற்கு இணையான வேகத்தில் செல்லக்கூடிய இ-மிதிவண்டி ஒன்றை தயாரித்துள்ளது. இதனை அண்மையில் சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வைரலாகி வருகன்றன. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

போலாரிட்டி ஸ்மார்ட் பைக்ஸ் நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் உள்ள புனே நகரத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனமாகும். இது, மின்சார பை-சைக்கிள்களைத் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனம், அதன் முதல் தயாரிப்பான மின்சாரத்தின் உதவியுடன் இயங்கும் மிதிவண்டி ஒன்றை அண்மையில் சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்களை ஜிக்வீல்ஸ் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

இந்த இ-மிதிவண்டி உச்சகட்டமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனைப் பெற்றிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்த சைக்கிள் மட்டும் சந்தயைில் விற்பனைக்கு வருமேயானால், இந்தியாவின் முதல் அதிவேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் மிதிவண்டி என்ற பெருமையை இது பெறும்.

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

மேலும், இந்த இ-மிதிவண்டிக்கு ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் கிடைக்கவும் இது வழிவகை செய்யும். ஏனென்றால் ஃபேம் திட்டத்தின்கீழ் மானியம் பெற அந்த வாகனம் குறைந்தது 80கிமீ வேகமாகவது செல்லக்கூடியதாக இருக்க வேண்டும். அந்தவகையில் பார்த்தால், இந்த இ-மிதிவண்டி 100கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால், இதற்கு அரசின் மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

அதேசமயம், இந்த இ-மிதிவண்டி குறித்த மற்ற எந்தவொரு தகவலையும் இந்த நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், இதில் 250வாட் திறனுடைய மின் மோட்டார் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஹப்-டைப் பிரஸ்லெஸ் டிசி யூனிட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

இத்துடன், கழட்டி மாட்டிக் கொள்ளும் வகையிலான லித்தியம் அயன் பேட்டரிகள் இதில் பொருத்தப்படாலம். பாதுகாப்பின் காரணமாகவும், எளிதில் கையாளும் வகையிலும் இதன் பேட்டரிகள் சைக்கிளின் ஃபிரேம் பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை, தேவைக்கேற்ப கழட்டி சார்ஜ் செய்து பின்னர் அதனுள்ளயே பொருத்திக்கொள்ளலாம்.

MOST READ: ஹெல்மெட் வேண்டுமா...? ரைடிங் ஜாக்கெட் வேண்டுமா...? யமஹாவின் இலவசத்திற்கு முந்துங்கள்...!

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

இந்த இ-மிதிவண்டியின் சேஸிஸ் அமைப்பு குறித்து பார்ப்போமேயானால், அது கழட்டி மாட்டி கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரத்யேமகாக இந்த இ-சைக்கிளில் பெடல் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது சைக்கிளின் பேட்டரி தீர்ந்துவிட்டால், பெடல் செய்து பயணிக்க உதவும். இதுவே இந்த இ-மிதிவண்டியின் சிறப்பம்சமாக இருக்கின்றது.

MOST READ: கன்னத்தை தடவியவாறு காரை ஓட்டிச் சென்றவருக்கு ரூ. 500 அபராதம்: போலீஸின் அத்துமீறல்...!

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

போலாரிட்டி நிறுவனத்தின் இந்த சிறப்பான இ-மிதிவண்டியில் சௌகரியமான பயணத்திற்கேற்ப சஸ்பென்ஷன் அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சைக்கிளின் முன்பக்கத்தில் இன்வெர்டட் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் கேஸ்-சார்ஜட் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் முன் மற்றும் பக்கத்தில் உள்ள வீலில் க்னாப்பி டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது கரடு முரடு என எந்த பாதையாக இருந்தாலும் சிறப்பாக செல்ல உதவும்.

MOST READ: துப்பாக்கி குண்டு துளைத்ததைப் போல வெடித்து சிதறிய காரின் சன் ரூஃப்: வீடியோ...!

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

மேலும், பாதுகாப்பு வசதியாக டிஸ்க் பிரேக்குகள் இந்த சைக்கிளின் இரு வீலிலும் பொருத்தப்பட உள்ளன. இந்த சைக்கிளில் குறிப்பாக எல்இடி மின் விளக்குகள் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் சால சிறந்த வசதியாக இன்டிகேட்டர்களும் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் அதிவேக இ-சைக்கிள் இதுதான்: பைக்கை மிஞ்சும் வேகம்....!

இதில் நவீன தொழில்நுட்பங்களாக டிஜிட்டல் ஸ்கிரீன், ஸ்விட்ச் கியர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இணைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இ-மிதிவண்டி குறைந்தது ரூ.60 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Pune-Based Polarity Electric Bicycle Spotted Testing. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X