விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பைக்குகளின் அக்டோபர் மாத விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் பல்சர் 150 மோட்டார்சைக்கிள் 2018 அக்டோபரை விட 33 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

2018 அக்டோபரில் 63,957 யூனிட்கள் விற்பனையான பஜாஜ் பல்சர் 150 பைக் கடந்த மாதத்தில் 43,002 பைக்குகள் தான் விற்பனையாகியுள்ளது. இதனால் இதன் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 33 சதவீதம் வீழ்ச்சியுடன் உள்ளது. இருப்பினும் பல்சர் 150 பைக் தான் ப்ளாட்டினா மற்றும் சிடி100 பைக்குகளுக்கு அடுத்து பஜாஜ் நிறுவனத்தின் மூன்றாவது சிறந்த விற்பனை பைக்காக உள்ளது.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

நியான், ஸ்டாண்டார்ட் மற்றும் ட்வின் டிஸ்க் என மூன்று வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனையாகி வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலையாக ரூ.75,200-ம், டாப் வேரியண்ட்டான ட்வின் டிஸ்க்கிற்கு ரூ.89,837-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

பஜாஜ் பல்சர் 150 பைக்கின் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமே, அதன் முந்தைய வெர்சன் பைக்கான பல்சர் 125-ன் அறிமுகம் தான் என கூறப்படுகிறது. பல்சர் 125சிசி பைக் பஜாஜின் எண்ட்ரி-லெவல் மாடலாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

இந்த பல்சர் 125 பைக் கடந்த அக்டோபர் மாதத்தில் 33,042 யூனிட் விற்பனையை பதிவு செய்திருந்தது. இந்த பைக்கின் விற்பனை ஒவ்வொரு மாதமும் சிறிது சிறிதாக முன்னேறி வருவதால், பல்சர் 150 பைக்கை வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

124சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினுடன் இயக்கி வரும் பல்சர் 125 பைக் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 12 பிஎச்பி பவரையும் 6500 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.66,618ல் இருந்து ஆரம்பமாகிறது.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

பல்சர் 125-ன் ட்ரம் வேரியண்ட்டின் தயாரிப்பை பஜாஜ் நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி சமீபத்தில் நிறுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

பஜாஜ் பல்சர் 150 பைக்கானது, 150சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினுடன் 14 பிஎச்பி பவரையும் 13.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இதனுடனும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் தொடர்ந்து சரிவை கண்டுவரும் பஜாஜ் பல்சர் 150 பைக்.. இதுதான் காரணமா?

பல்சர் 125 அறிமுகத்தால் பல்சர் 150 பைக்குகளின் விற்பனை குறைந்து வந்தாலும் இந்த பல்சர் 150 பைக் தான் இந்தியா சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் மூன்றாவது பஜாஜ் பைக்காக உள்ளது. இதன் விற்பனையை அதிகரிக்க இந்நிறுவனமும் பல அப்டேட்களை இந்த பைக்கில் ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இனி வருங்காலங்களிலாவது இந்த பைக்கின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Pulsar 150 Sales Registers A 33% Decline: Is The Pulsar 125 Sales Affecting Its Sibling?
Story first published: Friday, November 29, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X