சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசிய ராஜீவ் பஜாஜ்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் குறித்து மோசமாக விமர்சித்த டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய சேத்தக் ஸ்கூட்டர் பெயரையே இந்த புதிய எலெக்ட்ரிக் சூட்டியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இந்த ஸ்கூட்டரின் டிசைன் எல்லோரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

இந்த நிலையில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன், தரம் குறித்து டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவு துணைத் தலைவர் பிரதாப் போஸ் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். "இந்தியாவின் வடிவமைப்பு திறனுக்கு இன்று சோகமான நாள். வெஸ்பாவை காப்பயடித்து சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சரியான டிசைன் வாய்ப்பை பஜாஜ் ஆட்டோ இழந்துவிட்டது, " என்று தெரிவித்திருந்தார்.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் யாத்ரா என்ற 3,000 கிமீ தூர பயணம் நேற்று புனே நகரில் நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவில் பேசிய ராஜீவ் பஜாஜிடம், பிரதாப் போஸ் விமர்சனம் குறித்து வினவியுள்ளனர்.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

இதற்கு பதில் அளித்துள்ள ராஜீவ் பஜாஜ்,"பிரதாப் போஸ் யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர் டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவு தலைவர் என்று கருதுகிறேன். அவர் எங்கிருந்து வந்தவர் என்றும் தெரியாது. எங்களது சேத்தக் ஸ்கூட்டரின் டிசைன் குறித்து அவர் விமர்சிக்கலாம். ஆனால், ஸ்கூட்டரை முழுமையாக பார்க்காமல், விலை தெரியாமல் தரம் குறித்து விமர்சிக்க முடியாது.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

அத்துடன் ராஜீவ் பஜாஜ் விடவில்லை. டாடா ஹாரியர் எஸ்யூவியின் விளம்பர வீடியோவை வைத்து பிரதாப் போஸை மறைமுகமாக விளாசியுள்ளார். அதாவது, டாடா மோட்டார்ஸ் நிறுவனமே, லேண்ட்ரோவர் உதவியுடன் இந்த ஹாரியரை உருவாக்கி இருக்கிறது. அவர்களது (டாடா மோட்டார்ஸ்) டிசைன் திறன் மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை. காரை விற்பனை செய்வதற்காக லேண்ட்ரோவரின் கை எதிர்பார்த்துள்ளனர்," என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

அத்துடன் நிற்கவில்லை,"அவரது கூற்றுப்படி டிசைன் மட்டும் ஒரு தயாரிப்பின் வர்த்தகத்தை நிர்ணயிப்பதில்லை. டிசைனை மட்டுமே பார்த்தால், மாருதி கார்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகாது. விலை என்பது மிக முக்கிய விஷயம். அதனால்தான், 7-8 லட்சத்தை தாண்டினால், மாருதி கார்களை விட்டு வேறு கார்களை வாடிக்கையாளர்கள் தேடுகின்றனர். அவர்களுக்கு கூடுதல் மதிப்பு தேவைப்படுகிறது," என்று கூறி இருக்கிறார்.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

அடுத்த மாதம் முதல் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்படும். ஜனவரியில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும். ரூ.1 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் விலையில் சந்தைக்கு வர இருக்கிறது. முதல்கட்டமாக புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும்.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிமீயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக நிலைநிறுத்தப்படும். இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகிய அம்சங்கள் உள்ளன.

சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசித் தள்ளிய ராஜீவ் பஜாஜ்!

இந்த ஸ்கூட்டரில் 4kW மின் மோட்டாரும், லித்தியம் அயான் பேட்டரியும் கொடுக்கப்பட இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ முதல் 85 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 40 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தாக இருக்கும். சாதாரண சார்ஜர் மூலம் மட்டுமே சார்ஜ் ஏற்றும் வசதி கொடுக்கப்பட இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜர் தற்போதைக்கு வழங்கப்படாது என்று தெரிகிறது.

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் குறிப்பிட்டு கூறும்படியான விஷயங்களை தொடர்ந்து காணலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 15, 2019, 12:31 [IST]
English summary
Bajaj Auto MD, Rajiv Bajaj has thrashed out the statement of Tata Motors design VP Pratap Bose regarding Chetak EV design during the unveil event held in Pune yesterday.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+