ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

புரட்சிகரமான மாதத் தவணை திட்டத்தின் மூலமாக புதிய ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், இந்த பைக்குகளுக்கான பிரத்யேகமான ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக என்னென்ன வசதிகளை பெறலாம் என்பதை இந்த செய்தியில் காணலாம்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷன் "My Revolt" என்ற பெயரில் அறிமுகம் அழைக்கப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மிகவும் எளிதாக இயக்கும் வகையிலும், சிறப்பான கட்டுப்படுத்தும் முறைகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கின் உரிமையாளர் தனது ஸ்மார்ட்ஃபோனில் இந்த மொபைல் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பதிவு செய்தவுடன், பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் சம்பந்தப்பட்ட உரிமையாளர் பைக் இணைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு, பல்வேறு வசதிகளை இந்த ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவே பெறவும், கட்டுப்படுத்தவும் முடியும்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

டிரைவிங் மோடுகள்

ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிரைவிங் மோடுகளை பைக்கின் உரிமையாளர் மிக எளிதாக ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷன் மூலமாக வெவ்வேறு மோடுகளுக்கு மாற்ற முடியும். ரிவோல்ட் நிறுவனம் தனது ஆர்வி எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு விரைவில் நைட்ரோ என்ற டிரைவிங் ஆப்ஷனையும் வழங்க இருக்கிறது. இதன்மூலமாக, பைக்கின் அதிகபட்ச வேகம் இன்னமும் கூடுதலாகும்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

சைலென்சர் சப்தம்

பெட்ரோல் பைக்குகளை போன்று சைலென்சர் சப்தத்தை செயற்கையாக வழங்கும் வாய்ப்பும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இருக்கிறது. இதற்காக, ஸ்பீக்கர் மற்றும் விசேஷ ஆடியோ சிஸ்டமும் இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கிறது. Revolt, Roar, Rebel மற்றும் Rage ஆகிய 4 விதமான செயற்கையான சைலென்சர் சப்தத்தை ஸ்மார்ட்ஃபோன் ஆப் மூலமாக மாற்றிக் கொள்ள முடியும்.

நோ டென்ஷன்

ரிவோல்ட் ஆர்வி பைககுகளின் பேட்டரியில் சார்ஜ் குறைந்து போவது குறித்தும் உரிமையாளரின் ஸ்மார்ட்ஃபோனிலேயே எச்சரிக்கை தகவல் வந்துவிடும். சார்ஜ் குறைந்துபோனால், அருகிலுள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் பேட்டரி நிலையத்திற்கு வழிகாட்டும். அங்கு முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை உரியத் தொகையை கொடுத்து பேட்டரிகளை மாற்றி பயணத்தை தொடரலாம்.

இலவசம்

வரும் டிசம்பர் 31ந் தேதி வரை சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகளை கட்டணமில்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, மின்சாரத்திற்கு மட்டும் சிறியத் தொகை அளிக்க வேண்டி இருக்கும்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

பேட்டரி டோர் டெலிவிரி

இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை ஆர்டர் செய்ய முடியும். அவ்வாறு ஆர்டர் செய்தால், சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரி வீட்டிற்கே வந்து டோர் டெலிவிரி செய்யப்படும். பேட்டரியை டெலிவிரி செய்ய வேண்டிய தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றையும் இந்த ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷனில் குறிப்பிட இயலும்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

ஜியோ ஃபென்சிங்

ஜியோ ஃபென்சிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உங்களது ஆர்வி எலெக்ட்ரிக் பைக் குறிப்பிட்ட எல்லையை தாண்டாத வகையில், கட்டுப்படுத்தி வைக்க முடியும். ஒருவேளை திருடுபோனால், குறிப்பிட்ட இடத்தை விட்டு வண்டி வெளியே செல்லாது என்பதுடன், வண்டி எங்கு இருக்கிறது என்பதையும் ஜிபிஎஸ் டிராக்கர் மூலமாக துல்லியமாக உரிமையாளரின் ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

மைக் பைக் வசதி

இந்த வசதி மூலமாக பேட்டரியின் செயல்திறன், சர்வீஸ் செய்த விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். மேலும், இந்த பைக்கில் 4ஜி சிம் கார்டுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இருப்பதால், நிறுவனம் நேரடியாக புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை வழங்க முடியும். பைக்கில் ஏற்படும் பழுதுகளை ரிவோல்ட் பொறியாளர்கள் இருந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்க முடியும்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

மை டிரிப் பதிவுகள்

பயணித்த நாள், எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு பயணித்தோம், எவ்வளவு தூரம், எவ்வளவு நேரத்தில் பயணித்தோம், பைக்கின் சராசரி வேகம், பேட்டரியில் செலவான மின் சதவீத அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கான அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் ஆப்!

அவசர கால அழைப்பு

கார்களில் கொடுக்கப்படுவது போலவே அவசர கால அழைப்புகளுக்கான போன் நம்பர்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். அவசர சமயங்களில் தொடர்பு கொள்வதற்கு எளிதான வாய்ப்பை வழங்கும். பைக்கை ஸ்டார்ட் செய்வது, மின் மோட்டாரை அணைப்பதற்கும் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்ஃபோனை வைத்து பைக்கையும் புக்கிங் செய்யலாம்.

Most Read Articles
மேலும்... #ரிவோல்ட்
English summary
Revolt has launched their range of electric motorcycles in India. The electric motorcycles can be controlled via a mobile application to make life easier for the rider. We have explained the mobile application features in detail.
Story first published: Thursday, August 29, 2019, 17:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X