ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் கார்டு மூலமாக இணைய வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி

ரிவோல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் பைக் மாடல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் வரை முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், தற்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மட்டுமே முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி

இந்த நிலையில், இந்த பைக்கில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், முக்கியமானதாக ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் சிம் கார்டு மூலமாக நேரடி இணைய வசதியை வழங்கும் வசதி கொடுக்கப்படுகிறது.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி

இந்த வசதியை அளிப்பதற்காக ரிவோல்ட் நிறுவனம் வோடஃபோன் ஐடியா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் இ- சிம் கார்டு ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் பொருத்தப்பட இருக்கிறது.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி

இதன்மூலமாக, ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளில் 4ஜி இணைய வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த இணைய வசதி மூலமாக பல்வேறு வசதிகளை ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக உரிமையாளர் பெற முடியும்.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி

வண்டியின் நிகழ்நேர இருப்பிடம், ஜியோ ஃபென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதியை தாண்டி பைக் செல்ல முடியாதவாறு கட்டுப்படுத்துதல், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி

புதிய ரிவோல்ட் ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக் ரூத2,999 மாதத் தவணையிலும், ஆர்வி400 ஸ்டான்டர்டு மாடல் ரூ.3,499 மாதத் தவணையிலும், ஆர்வி400 பிரிமீயம் மாடல் ரூ.3,999 விலையிலும் கிடைக்கிறது. இந்த பைக்குகளை ஒரே பேமண்ட்டில் வாங்குவதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ரிவோல்ட்
English summary
Revolt Intellicorp has partnered with Vodafone Idea to offer 4G 'Internet of Things' connectivity on the Revolt electric bikes.
Story first published: Thursday, October 10, 2019, 19:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X