ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க அந்நிறுவனம் புது முடிவை எடுத்துள்ளது. அதன் விபரங்களை காணலாம்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 என்ற பெயர்களில் இரட்டையர்களாக வந்த இந்த இரண்டு மாடல்களும் மிக சவாலான விலையில் களமிறக்கப்பட்டன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

இரண்டிலுமே இரண்டு சிலிண்டர்கள் அமைப்புடைய எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. மேலும், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலுக்கு ரூ.2.50 லட்சம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 மாடல் ரூ.2.65 லட்சம் விலையிலும் வந்தது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவான விலையில் இந்த மாடல்கள் வந்ததால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

மேலும், முன்பதிவு எண்ணிக்கை மிக வலுவாக உயர்ந்த நிலையில், காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி, 5 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

இதனால், இந்த மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களும், புக்கிங் செய்ய இருப்பவர்களும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட ராயல் என்ஃபீல்டு இப்போது காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

தற்போது மாதத்திற்கு 2,500 ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை மாதத்திற்கு 4,000 முதல் 5,000 வரை உயர்த்துவதற்கு ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இதனால், காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

அதாவது, இப்போது முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு இரண்டு மாதங்களில் 650 மோட்டார்சைக்கிள் கையில் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கான மகிழ்ச்சிகரமான செய்தியாகவே இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டிசைன் எல்லோராலும் அதிகம் விரும்பப்படுகிறது. கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளுக்கும் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருகிறது. இந்த இரண்டு மாடல்களிலுமே பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 648சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள்கள் வெயிட்டிங் பீரியட் குறைகிறது!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல்களில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் நேரடி போட்டியாளராக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
According to Royal Enfield there is more demand for the Interceptor 650 than the Continental GT 650, however, both offerings still come with the same waiting period.To reduce the waiting period of the Royal Enfield 650-twins, the Chennai-based brand is said to be ramping up its production numbers.
Story first published: Monday, April 15, 2019, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X