மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ராயல் என்பீல்டு நிறுவனம் மலிவான விலையில் புதிய பைக் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து அதிரடி காட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. இந்தியாவிலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சொந்தமாக ஒரு புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கி கெத்தாக வலம் வர வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பவர்கள் ஏராளம். இதில், நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

அப்படி என்றால் இது உங்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்திதான். ராயல் என்பீல்டு பைக்கை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருந்தாலும், ஒரு சிலரால் அதனை நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது. ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை கொஞ்சம் அதிகம் என்பதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

அந்த குறையை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது சற்று நிவர்த்தி செய்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறை சந்தித்து வரும் வரலாறு காணாத வீழ்ச்சி தொடர்பான செய்திகளை நீங்களும் வாசித்திருக்க கூடும்.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

இந்திய மார்க்கெட்டில் நிலவி வரும் கடுமையான மந்த நிலை காரணமாக பாதிப்படைந்த நிறுவனங்களில் ராயல் என்பீல்டும் ஒன்று. ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக அவ்வளவு பிரமாதமாக இல்லை. எனவே விற்பனையை அதிகரிப்பதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு ஆலோசனைகளை செய்து வந்தது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வரும் பைக்குகளில் விலை குறைவான மாடல் என்றால், அது புல்லட் 350 (Bullet 350) பைக்தான். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.21 லட்ச ரூபாய். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லைன் அப்பில் மிகவும் மலிவான விலை கொண்ட மாடல் என்ற பெருமை புல்லட் 350 வசம் இருந்து வந்தது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ஆனால் இதை விட குறைவான விலையில் புதிய பைக் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு வந்தது. இதன் மூலம் விற்பனை எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதுடன், சரிவில் இருந்து மீண்டு வர முடியும் எனவும் ராயல் என்பீல்டு நிறுவனம் எண்ணியது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

இதன்படி தற்போது இந்திய மார்க்கெட்டில் 2019 புல்லட் 350எக்ஸ் (Bullet 350X) பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய புல்லட் 350எக்ஸ் பைக் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். அவை 350எக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் 350எக்ஸ் இஎஸ். இதில், இஎஸ் என்பது எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டை (Electric Start) குறிக்கிறது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிட்டு பார்த்தால் புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் இஎஸ் ஆகிய பைக்குகளில் பெரும்பாலும் காஸ்மெட்டிக் அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இவற்றின் எரிபொருள் டேங்க்கில் புதிதான டிசைன் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு லோகோ வழங்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ராயல் என்பீல்டு புல்லட் 350எக்ஸ் பைக்கானது, புல்லட் சில்வர், சபையர் ப்ளூ மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும். அதேபோல் ராயல் என்பீல்டு புல்லட் 350எக்ஸ் இஎஸ் பைக்கும் ரீகல் ரெட், ராயல் ப்ளூ மற்றும் ஜெட் பிளாக் ஆகிய மூன்று புதிய பெயிண்ட் ஸ்கீம்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

காஸ்மெட்டிக் அப்டேட்கள் தவிர பெரிய அளவில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதன்படி மெக்கானிக்கலாகவும் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மற்ற அனைத்து ராயல் என்பீல்டு 350 சிசி பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

இதன்படி ராயல் என்பீல்டு புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் இஎஸ் மாடல்களில், 346 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இன்ஜின் இன்னும் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாகதான் உள்ளது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. எனவே ராயல் என்பீல்டு நிறுவனம் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அவை லான்ச் ஆக கொஞ்சம் காலம் ஆகும் என தெரிகிறது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் அடுத்த ஆண்டுதான் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ராயல் என்பீல்டு புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் இஎஸ் பைக்குகளில் பிஎஸ்-4 தரத்திற்கு இணையான இன்ஜின் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ராயல் என்பீல்டு புல்லட் 350எக்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 1.12 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 350எக்ஸ் இஎஸ் வேரியண்ட்டின் விலை 1.21 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

இதன் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லைன் அப்பில் மிகவும் மலிவான விலை கொண்ட மாடலாக தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புல்லட் 350எக்ஸ் பைக் உருவெடுத்துள்ளது. அதாவது இந்திய மார்க்கெட்டில் இதை விட குறைவான விலையில் புதிய ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிளை உங்களால் வாங்க முடியாது.

மலிவான விலையில் புதிய பைக்கை களமிறக்கியது ராயல் என்பீல்டு... ஷோரூம்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இனி ராயல் என்பீல்டு நிறுவன பைக்கை சொந்தமாக்குவது என்பது எளிதான காரியமாக இருக்கும். இந்த நடவடிக்கையின் மூலம் விற்பனை எண்ணிக்கை உயர்ந்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என ராயல் என்பீல்டு நிறுவனம் நம்புகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Bullet 350X Launched In India With Prices Starting At Rs 1.12 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X