ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி 650 பைக், ரூ. 4 லட்சம் செலவில் டுகாட்டி பைக்காக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

அண்மைக் காலங்களாக இந்தியச் சாலைகளில் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாக, வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குவது மேலை நாடுகளில் இருக்கும் கலாச்சாரமாக பார்க்கப்படுகின்றது. ஆனால், சமீபகாலமாக இந்த கலாச்சாரம் இந்தியாவிலும் வளர்ந்து வருகின்றது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

அதேசமயம், இது இந்தியாவில் இது சட்டத்திற்கு புரம்பான விஷயமாக கருதப்படுகின்றது. இருப்பினும், வாகன ஓட்டிகள் சிலர் அவர்களுடைய வாகனங்களை, அவர்களுக்கு பிடித்தமான வழிகளில் மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகளில் ஒன்றான கான்டினென்டல் ஜிடி 650 மாடல் பைக்கை ராஜபுத்தனா என்ற கஸ்டமைஸ் நிறுவனம் மாடிஃபை செய்துள்ளது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

இந்நிறுவனம், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

அதேசமயம், இந்த ராஜபுத்தனா கஸ்டமைஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள பல திறமையான வாகன மாடிஃபிகேஷன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

உயர்தரமான செயலாக்கம் மற்றும் அதிக திறன் கொண்ட வேலைப்பாடு ஆகியவற்றின் காரணமாக இந்நிறுவனம் மிகவும் பிரபலமானாதாக திகழ்கின்றது. இதன்காரணமாகவே இந்நிறுவனத்திற்கு, ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் ஆகிய நிறுவனங்கள் கமிஷன் நிலையில் வேலை வழங்கி வருகின்றன.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

அந்தவகையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர், ராஜபுத்தனா கஸ்டம்ஸ் நிறுவனத்தை நாடியுள்ளனர். இதனடிப்படையிலேயே ரெட்ரோ கிளாசிக் ரகத்திலான கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

மேலும், இந்த மாற்றத்தால் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக், தற்போது ஸ்போர்ட்டி கஃபே ரேஸர் ஸ்டைலைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், இந்த பைக் சற்று கிளாசி லுக்கிலும் காட்சியளிக்கின்றது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

பைக்கின் கஃபே ரேஸர் தோற்றத்திற்காக, அதன் சேஸிஸை ஜியோமெட்ரி ரகத்தில் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்தது. ஆகையால், கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் ஒரிஜினல் சேஸிஸ் வெளியேற்றப்பட்டு, புதிய சப்-ஃபிரேம்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில், ஒரு பக்கம் ட்ரெல்லிஸ் ஃபிரமைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பைக்கின் பின்பகுதிக்கு புதிய மினிமல் டெயில் பீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில்தான் பைக்கிற்கான பெஸ்போக் ரகத்திலான இருக்கை மற்றும் பின்பக்க மின் விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பு தோற்றத்தைப் பெற்றிருக்கும் அந்த பைக் குறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

மேலும், இந்த ராயல்என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை கூடுதல் ஸ்போர்டியர் லுக்கில் காண்பிப்பதற்காக, அதன் பல்வேறு ஒரிஜினல் பாகங்கள் நீக்கப்பட்டு ஆஃப்டர் மார்க்கெட் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

அந்தவகையில், பைக்கின் ஒரிஜினல் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு, ஷோவா இன்வெர்டட் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டுள்ளது. இதே ரகத்திலான சஸ்பென்ஷன்தான் டுகாட்டி 848 பைக்கிலும் காட்சியளிக்கின்றது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

அதேபோன்று, பின்பக்க சஸ்பென்ஷனிற்காக ஓஹ்லின்ஸ் டிடிஎக்ஸ் ஜிபி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இந்த பைக்கிற்கு 17-இன்சிலான மர்செஸ்ஸினி அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பான பயண அனுபவத்திற்காக, பைரெல்லி நிறுவனத்தின் டியப்ளோ சூப்பர் பைக் ஸ்லிக் டயர் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

மேலும், பிரேக்கிங் வசதிக்காக பிரெம்போ பிரேக்கிங் சிஸ்டம் இதில் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாற்றங்களைப் பெற்ற இந்த பைக்கிற்கு, அதன் எஞ்ஜின் மட்டும் அப்படியே விடப்பட்டுள்ளது. ஆனால், சிறிய கே அண்ட் என் என்ற பில்டர் மட்டும் கூடுதலாக அதில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், எக்சாஸ்ட் சிஸ்டத்திற்கும் பிரேஸ் டிப்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

இத்துடன் கூடுதல் சிறப்பு வசதிகளாக, கஃபே ரேஸர் தோற்றத்திலான வட்ட வடிவ, கிரில் அமைப்பைக் கொண்ட எல்இடி மின் விளக்கு ஹெட்லேம்ப், ப்யூவல் டேங்கில் பித்தளை வண்ணத்திலான ராயல்என்பீல்டு (RE) லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒரிஜினல் எக்சாஸ்ட் சிஸ்டத்திற்கு பதிலாக இரு துளை கொண்ட புதிய சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ. 4 லட்சத்தில் டுகாட்டி பைக்காக மாறிய ராயல் என்பீல்டு 650 பைக்... வீடியோ...!

இந்த ஒட்டுமொத்த மாற்றத்தால், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி650 பைக் பார்ப்பதற்கு மிகவும் அழகான, விலையுயர்ந்த ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளைப் போன்று காட்சியளிக்கின்றது. மேலும், இந்த மாற்றங்களால், இது ராயல் என்பீல்டின் கான்டினென்டல் 650 பைக்தானா... என்ற கேள்வியை எழுப்பும் வகையில் காட்சியை வழங்குகின்றது. இந்த மாற்றத்திற்காக ரூ. 4 செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

Most Read Articles
English summary
Royal Enfield Continental GT 650 Modified Like Ducati. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X