விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

ராயல் என்பீல்ட் பைக்கின் விற்பனையானது கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியைக் காட்டிலும் நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் 14 சதவீதம் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

சென்னை ஒரகடத்தில் ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என்கிற இரண்டு முறைகளின்படி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதில், தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

இந்தப் போராட்டத்தின் காரணமாக ராயல் என்பீல்டு பைக்கின் உற்பத்தி மற்றும் விற்பனை மிகப் பெரிய சரிவைக் கண்டிருப்பதாக ராயல் என்பீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ராயல் என்பீல்ட் பைக்குகளின் விற்பனையின் சரிவுக்கு காரணமாக ஜாவா பைக்கின் வருகை என்றுக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தின் காரணமாகவே ராயல் என்பீல்ட் பைக் விற்பனை சரிந்திருப்பதாக தற்போது கூறப்பட்டு வருகிறது.

விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

கடந்த மூன்று மாதத்தில் இதுவரை இரண்டு முறைப் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி, பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஆரம்பித்த இந்த போராட்டம் அதே மாதம் 27ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதனால், அந்த மாதத்தில் மட்டும் 3 ஆயிரம் யூனிட்கள் குறைவாகவே உற்பத்திச் செய்யப்பட்டது.

விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

இதேபோன்று, கடந்த 2018ம் ஆண்டின் இறுதியில் தற்காலிக பணியாளர்கள் 50 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற்ற இப்போராட்டத்தால் ராயால் என்பீல்ட் நிறுவனம் மிகப் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தது. அப்போது, 28 ஆயிரம் வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பைக் கட்டுபடுத்த மற்ற ஆலைகளில் இருந்து பைக்குகள் கொண்டுவரப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

இதுபோன்று பல்வேறு காரணங்களால் ராயல் என்பீல்ட் பைக்கின் விற்பனையானது சமீபகாலமாக தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றது. அவ்வாறு கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 71 ஆயிரத்து 354 பைக்குகள் விற்பனையாகின. ஆனால், இது நடப்பாண்டில் 16 சதவீதம் குறைந்து 60 ஆயிரத்து 66 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதுபோன்று கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் ராயல் என்பீல்ட் நிறுவனம் சரிவையேக் கண்டு வருகிறது. இதுகுறித்த முழு தகவல் பட்டியலைக் கீழேக் காணலாம்.

Mth

Sales

Sales

Mth

%

Feb-19

60066 71354 Feb-18

-16
Jan-19

70872 76205 Jan-18

-7.00
Dec-18

56026 65367 Dec-17

-14.29
Nov-18

65026 67776 Nov-17

-4.06
Oct-18

70044 68014 Oct-17

-2.98
Total

322034 348716 Total

-7.65
விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

இந்த நிலையில், விற்பனைக் குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த லால் கூறியதாவது, "2018ம் ஆண்டின் இரண்டாம் பாகம் மிகவும் சாவாலான நாட்களாக எங்களுக்கு இருந்தது. வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, ஊழியர்கள் போராட்டம் என பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்துள்ளோம். இதனால், ராயல் என்பீல்ட் பைக்கின் விற்பனை பெருமளவில் சரிவைச் சந்தித்தது.

விற்பனையில் தொடர் சரிவைக் காணும் ராயல் என்பீல்ட்: இதுதான் காரணமா?

இருப்பினும், ராயல் என்பீல்டின் பங்குச் சந்தை எந்தவொரு மாற்றமின்றி, அடிப்படை முன்னேற்றத்துடன் இருந்து வருகிறது. இந்த விற்பனைச் சரிவானது தற்காலிக தடையாக தான் நாங்கள் கருதுகிறோம். இதுகூடிய விரைவிலேயே முடிவுக்கு வரும் என்பதை நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

Most Read Articles
English summary
Royal Enfield's February Sales Fall By 14 Percent. Read In Tamil.
Story first published: Saturday, March 2, 2019, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X