இந்தியாவில் இந்த பைக்கை வாங்கிய முதல் பெண் இவர்தான்... சாலையில் ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்...

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை வாங்கிய இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமையை ஒருவர் பெற்றுள்ளார். மக்கள் அவரை வியப்புடன் பார்த்து வரும் நிலையில், இந்த பைக்கின் விலை தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

இந்த பைக்கை வாங்கிய இந்தியாவின் முதல் பெண் இவர்தான்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

ராயல் என்பீல்டு ரசிகர்கள் இவற்றை ''650 டிவின்ஸ்'' என செல்லப்பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் இந்திய மார்க்கெட்டில் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. என்றாலும் இன்டர்செப்டார் 650தான் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த பைக்கை வாங்கிய இந்தியாவின் முதல் பெண் இவர்தான்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில், 649 சிசி, ஏர் கூல்டு, பேரலல்-டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இதில், ஸ்டாண்டர்டாக ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின் என 2 சக்கரங்களிலும், டிஸ்க் பிரேக்குகளை இந்த மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது. அத்துடன் ஸ்டாண்டர்டாக ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வரலாற்றில், இன்டர்செப்டார் 650தான் மிகவும் ''ஸ்மூத்'' ஆன பைக் என சொல்லலாம். இந்த பைக்கின் 270 டிகிரி பேரலல்-டிவின் இன்ஜின் ஏறத்தாழ ''வைப்ரேஷன்-ப்ரீ'' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பெரிய அளவில் அதிர்வுகள் இருக்காது.

இந்த பைக்கை வாங்கிய இந்தியாவின் முதல் பெண் இவர்தான்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார் சைக்கிள்களை வாங்க வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டுள்ளனர். எனவே தற்போது இவ்விரு பைக்குகளுக்கான காத்திருப்பு காலம், நிறத்தை பொறுத்து, 3-6 மாதங்களாக உள்ளது.

இந்த சூழலில் ஜாவாவின் வருகையால், ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை சரிவு என்பது போன்ற செய்திகளையே கேட்டு கொண்டிருந்த ராயல் என்பீல்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை பெண் ஒருவர் வாங்கியுள்ளார். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் இன்டர்செப்டார் 650 உரிமையாளர் என கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு மோட்டார்ஸ் நிறுவனத்தில் அவர் பைக்கை டெலிவரி எடுத்துள்ளார்.

ஆனால் அந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும் அவர் பைக்கை டெலிவரி எடுத்த புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்தியாவில் இந்த பைக்கை வாங்கிய முதல் பெண் இவர்தான்... சாலையில் ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்...

ராயல் என்பீல்டு ஷோரூமின் சார்பில் கேக் வெட்டி, பூங்கொத்து கொடுத்து அவரை கவுரவித்துள்ளனர். பைக்கை டெலிவரி எடுத்தவுடன், அந்த பெண் உற்சாகமாக ஒரு ரைடு சென்று வந்தார். ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆனால் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு ரசிகைகள் பட்டாளமும் இருப்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இவர்தான் இந்தியாவின் முதல் பெண் இன்டர்செப்டார் 650 உரிமையாளர் என ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனவே வேறு பெண் உரிமையாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என இணையதளத்தின் உதவியுடன் நாங்கள் தேடி பார்த்தோம். ஆனால் அப்படி யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இவர்தான் இந்தியாவின் முதல் பெண் இன்டர்செப்டார் 650 உரிமையாளராக இருக்க கூடும்.

இந்த பைக்கை வாங்கிய இந்தியாவின் முதல் பெண் இவர்தான்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் விலை 2.49 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மலிவான பேரலல்-டிவின் சிலிண்டர் மோட்டார் சைக்கிள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 பைக்குகளிலும், புத்தம் புதிய "P" பிளாட்பார்மை ராயல் என்பீல்டு நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில் மேலும் சில புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு விரைவாக லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Jacob's Tribe

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 First Woman Owner From Bangalore. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X