ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

ஜாவா பெராக் பைக்கிற்கு நேர் போட்டியாக புதிய க்ளாசிக் 350 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

ஜாவா பெராக் பைக் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஒற்றை இருக்கை அமைப்புடன் 'பாபர்' என்ற பிரத்யேக வடிவமைப்புடன் இந்த மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. இந்த நிலையில், ஜாவா பெராக் வருகை நிச்சயம் தங்களது வர்த்தகத்திற்கு நெருக்கடியை தரும் ராயல் என்ஃபீல்டு உணர்ந்து கொண்டுள்ளது.

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

இதன் காரணமாக, ஜாவா பெராக் வந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், தனது க்ளாசிக் 350 பைக்கின் ஒற்றை இருக்கை மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட ஜாவா பெராக் பைக்கிற்கு இணையான பாபர் மாடல் போன்றே தோற்றமளிக்கிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிங்கிள் சீட் மாடல்.

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளை வைத்திருக்கும் சில வாடிக்கையாளர்கள் பாபர் ஸ்டைலில் இதுபோன்று கஸ்டமைஸ் செய்து கொள்வது வழக்கம். கஸ்டமைஸ் செய்வதில் கைசேர்ந்த கராஜில் கொடுத்து தங்களது க்ளாசிக் 350 பைக்கை பாபர் ஸ்டைலுக்கு மாற்றிக் கொள்வர்.

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

ஆனால், தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமே நேரடியாக கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. போட்டியை சமாளிக்கும் விதமாக தனது மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு இதுபோன்று பல்வேறு விதமான மாற்றங்களையும், அழகுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் நிறுவனமே நேரடியாக வழங்குகிறது.

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

இது நிச்சயம் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விஷயமாக இருக்கும். ஏனெனில், வெளியில் கஸ்டமைஸ் செய்தால் வாரண்டியில் பாதிப்பு ஏற்படும். ஆனால். நிறுவனமே இதுபோன்ற கஸ்டமைஸ் பணிகளை செய்து தருவது வாடிக்கையாளர் பார்வையில் சிறப்பான விஷயமாக இருக்கும். அதுவும், வண்டியை வாங்கும்போதே, தங்களுக்கு விருப்பமான முறையில் டெலிவிரி பெற முடியும்.

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

புதிய சிங்கிள் சீட் க்ளாசிக் 350 மாடலில் மெர்குரி சில்வர் மற்றும் ப்யூர் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலுக்கு விசேஷமான ஒற்றை இருக்கை பொருத்தி தரப்படுகிறது.

MOST READ: ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

ஜாவா பெராக் பைக்கிற்கு ரூ.1.94 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மாடலுக்கு ரூ.1.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: புதிய ஜாவா பெராக் பைக் விற்பனைக்கு அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

சென்னை, பெங்களூர், ஹைதாராபாத், புனே, மும்பை மற்றும் டெல்லி உள்ளடக்கிய வடமத்திய பிராந்திய பகுதிகளில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களில் இந்த புதிய மாடல் கிடைப்பதுடன், கஸ்டமைஸ் வாய்ப்பும் கொடுக்கப்பட இருக்கிறது.

MOST READ: சேத்தக் டிசைன் குறித்து விமர்சனம்... டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசிய ராஜீவ் பஜாஜ்

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

கூடுதலாக அராய் அமைப்பின் சான்றளிக்கப்பட்ட அலாய் வீல்கள், லெதர் இருக்கைகள், எரிபொருள் கலனில் ஸ்டிக்கர்கள், பேனியர் பைகள், எஞ்சின் கார்டு உள்ளிட்டவற்றை கூடுதல் ஆக்சஸெரீகளாக வாங்கி பொருத்திக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த கஸ்டமைஸ் ஆக்சஸெரீகளுக்கு 2 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

ஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் 346 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.80 பிஎச்பி பவரையும், 28 பிஎச்பி பவரையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Royal Enfield has launched Classic 350 with single seat option in selected cities in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X