இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

ராயல் என்ட்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பப்படி மாற்றி கொள்வதற்கு ஏற்ற வாகனங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி ஏகப்பட்ட மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகளை நாம் பார்த்திருப்போம்.

இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

ஆனால் இவ்வாறு மிக பெரிய டயர்களுடன் இயங்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்கை பார்த்துள்ளீர்களா? மிக அகலமாக பார்பதற்கு லாரி டயர்களுடன் உள்ளது போல் இருக்கும் இந்த ராயல் எண்ட்பீல்டு பைக்கை பஞ்சாப் கபுர்தலா மாவட்டத்தை சேர்ந்த சர்தார் மல்பீர் சிங் என்பவர் தனது மகனுடன் இணைந்து தனது விருப்பதற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

டயர் மட்டுமில்லாமல் இந்த டயருக்கு ஏற்ற மட்கார்ட், அகலமான ஹேண்டில்பார், கூடுதல் வெளிச்சத்தை தரக்கூடிய எல்இடி ஹெட்லைட் போன்றவற்றையும் சர்தார் மல்பீர் சிங் இந்த பைக்கில் பொருத்தியுள்ளார். பின்புற டயருக்கும் இதே அளவில் மட்கார்ட்டை கொடுத்துள்ள இவர் இருக்கையை ஒருவர் மட்டுமே அமரும்படி பொருத்தியுள்ளார். இந்த இருக்கைக்கு அடியில், என்ஜினிற்கு மேற்புறத்தில், பைக்கின் பக்கவாட்டுகளில் வட இந்தியர்களுக்கே உரிதான வெவ்வேறு நிற லைட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

சிக்கிம் கடவுள்களுள் ஒருவரான குருநானக்கின் 550ஆம் பிறந்தநாள் இந்த வருடத்தில் விமர்சையாக கொண்டாட்டப்பட்டது. அதனை நினைவுக்கூறும் விதமாக சர்தார் மல்பீர் சிங் 550 என்கிற எண்ணுடன் முத்திரை ஒன்றை பெட்ரோல் டேங்கில் பொருத்தியுள்ளார்.

இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

இந்த பைக்கை சர்தார் மல்பீர் சிங் தான் மாற்றியமைத்துள்ளார் என்றாலும், இதற்கு முழுக்க முழுக்க ஆலோசனைகளை வழங்கியது வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவரது மகன் தானாம். இந்த பைக்கை மாற்றியமைக்க தேவைப்பட்ட பாகங்கள் பெரும்பாலும் அருகிலுள்ள நகரங்களிலேயே கிடைத்துவிட்டது எனவும், சில பாகங்கள் டெல்லி சென்று வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறுகிறார், சர்தார் மல்பீர் சிங்.

இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

ராயல் எண்ட்பீல்ட்டின் புல்லட் பைக்கை இவ்வாறு மாற்றியமைக்கும்போது இவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது, சக்கரத்தின் ரிம் பகுதி தானாம். இதனை மாற்ற லோக்கல் மெக்கானிக் மற்றும் ஒரு இன்ஜினீயர் உதவியை தந்தையும் மகனும் நாடியுள்ளனர். இரு தனித்தனி ரிம்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரிம்-ஆக இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த நிறுத்தத்திற்காக பின் சக்கரத்தில் டிஸ்க் ப்ரேக்குகளும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

சர்தார் மல்பீர் சிங் இவ்வாறு தனது விருப்பத்திற்கு ஏற்ப இந்த ராயல் எண்ட்பீல்டு பைக்கை மாற்றியமைக்க சுமார் 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. இதற்கு இவர்கள் செலவழித்துள்ள மொத்த தொகை 4 லட்சமாகும். இந்த வெளிப்புற தோற்றங்களை தவிர்த்து என்ஜினின் வெளியிடும் ஆற்றலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதா என்பது சரியாக தெரியவில்லை.

இந்தியாவிலேயே அதிக அகலமான டயர்களை கொண்ட ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான்... வீடியோவை பாருங்க

இந்த பைக்கால் அந்த நகரம் முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ள சர்தார் மல்பீர் சிங்கை அந்த பகுதியினர் புல்லட் வாலா பாபா என்று தான் இப்போதெல்லாம் அழைக்கிறார்களாம். இந்த பைக்கை இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஓட்டி வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இதோ உங்களுக்காக...

346சிசி, நான்கு ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக் 19.8 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்ட்-ஆக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக அகலமான சக்கரங்களுடன் இயங்கும் ராயல் எண்ட்பீல்டு பைக் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
India’s WILDEST big tyred Royal Enfield Dad & sons collaborate to build this bike
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X