விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் விலை குறைவான மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் மிக வலுவான இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த சந்தையில் தனது இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை களமிறக்கியது.

விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இந்த ரகத்தில் விலை குறைவான இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் விலை குறைவான மாடலை களமிறக்குவதற்கு ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

ஐரோப்பிய ஒன்றிய காப்புரிமை அறிவுசார் சொத்து காப்புரிமை அலுவலகத்தில் புதிய மோட்டார்சைக்கிளுக்கான மீட்டியோர் என்ற பெயரை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மீட்டியோர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அந்த அமைப்பு வெளியிட்ட பதிப்பில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இந்த பெயரை முறைப்படி பதிவு செய்து பெறுவதற்கு வரும் ஜூலை மாதம் வரை ராயல் என்ஃபீல்டு காத்திருக்க வேண்டும். அப்போதுதான் உறுதிசெய்யப்படும். இந்த புதிய பெயரானது இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் விலை குறைவான மாடலுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

MOST READ: முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

மற்றொரு தகவலின்படி, கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த கேஎக்ஸ் 838சிசி கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலுக்கு சூட்டப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. எனினும், கேஎக்ஸ் 838சிசி மாடலை உடனடியாக தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடம் இல்லை என்று தெரிகிறது.

விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இந்த சூழலில், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலின் விலை குறைவான மாடலுக்குத்தான் மீட்டியோர் பெயர் வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. 1952ல் மீட்டியோர் என்ற மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் என்ற பெயரில் 500சிசி மாடலை அமெரிக்க சந்தையில் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்தது.

MOST READ: இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

விலை குறைவான இன்டர்செப்டார் 650 மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

அதன்பிறகு, 1956ல் சூப்பர் மீட்டியோர் என்ற பெயரில் இந்த மாடல் விற்பனை செய்யப்பட்டது. 1960களில் இன்டர்செப்டார் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மீட்டியோர் பெயரை மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் ராயல் என்ஃபீல்டு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Chennai based motorcycle manufacturer Royal Enfield is on a mission to become the largest mid-size segment motorcycle producer. The launch of the Interceptor 650 and the Continental 650 GT was a step in that direction. Expansion plans include launching an 838cc motorcycle, the KX Concept that was showcased at the EICMA Motor Show a few months ago.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more