விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள்களான, கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு பைக்குகளையும் ஸ்பெஷல் அப்டேட்டிற்காக அழைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனம், ட்வின் மாடல் பைக்குகளாக கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு பைக்குகளையும் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்தது. இது, மலிவான விலையில் களமிறிக்கப்பட்ட, இரண்டு சைலென்சர்கள் கொண்ட மாடல் பைக் என்பதால் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவியது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இதனால், உள் நாடு மட்டுமின்ற வெளிநாடுகளிலும் இந்த பைக்கிற்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டது. அவ்வாறு, இந்த பைக்கிற்கான காத்திருப்பு காலம், கடந்த மே மாதத்தின்படி, 4 முதல் 6 ஆறு மாதங்களாக இருந்தன. அந்த அளவிற்கு இந்த ட்வின் பைக்குகளுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையே காணப்பட்டது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இந்த நிறுவனம் கடுமையான போட்டிகளுக்கிடையேதான் இந்த ட்வின் மாடல்களை இருசக்கர வாகன சந்தையில் களமிறக்கியிருந்தது. அந்தவகையில், ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் நிறுவனங்களின் பைக்குகளின் விற்பனையைக் காட்டிலும் அதிகமான விற்பனையைப் பெற்று இந்த ட்வின் பைக்குகள் சாதனைப் படைத்தன. அவ்வாறு, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, ட்வின் பைக்குகளின் 2,000 யூனிட்கள் விற்கப்பட்டிருந்தன.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இதன்காரணமாக, இந்த சூழ்நிலையில் இருந்து தாக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக ஹார்லி டேவிட்சன் நிறுவனம், பல்வேறு சிறப்பு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்க ஆரம்பித்தது. இருப்பினும், 650 ட்வின் பைக்குகளுக்கான சந்தையை சற்றும் குறையாமல் நிலையான இடத்தில் இருந்து வருகின்றது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இந்நிலையில், 650 ட்வின் பைக்குகளின் உரிமையாளர்கள் சிலர், ட்வின் பைக்குகள் உயரமான பாதையில் சரியான வேகத்தில் இயங்கவில்லை என்ற புகார்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ஆகையால், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2019 மே மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 ஆகிய மாடல் பைக்குகளை அப்டேட் செய்வதற்காக, ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கூடிய விரைவில் அந்த அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இந்த கோளாறு தீர்க்கும் விதமாக முன்னதாக அப்டேட் செய்யப்பட்ட முன்மாதிரி மாடலை அராய் (ARAI) அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதில், அப்டேட்கள் சிறப்பான முறையில் தெரியவந்ததே. இதைத்தொடர்ந்தே, ராயல்என்பீல்டு நிறுவனம் ட்வின் பைக்குகளை அப்டேட் செய்ய அழைக்க இருக்கின்றது. அவ்வாறு, இவை இம்மாதத்தின் இறுதிக்குள் அழைக்கப்பட்டுவிடலாம் என கூறப்படுகின்றது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

முன்னதாக, இதேபோன்று இந்த ட்வின் மாடல் பைக்குகளில், ரப்பர் ஸ்டாப்பர் கொண்ட புதிய சஸ்பென்ஷன்கள் இலவசமாக அப்டேட் செய்யப்பட்டன. இந்த ரப்பர் ஸ்டாப்பர்கள், மோட்டார் சைக்கிள் பள்ளம் மற்றும் மேடுகளில் செல்லும்போது சஸ்பென்ஷனை ஸ்மூத்தாக இயங்க வைக்க உதவுகின்றன. இது, பழைய மாடலில் இடம்பெறவில்லை என கூறப்படுகின்றது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல்என்பீல்டு நிறுவனம், அதன் தயாரிப்புகளைப் பயன்படுத்தி வரும் உரிமையாளர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு செய்வதில் சிறப்பாக செயலாற்றி வருவது, அதன் வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல் என்பீல்டின் இந்த ட்வின் மோட்டார்சைக்கிள் உருவத்தில் மாறுபட்டாலும், ஒரே பவரைக் கொண்ட எஞ்ஜின்களைத்தான் பெற்றுள்ளன. அந்தவகையில், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு பைக்குகளிலும், 648 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. இது, அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Source: gaadiwaadi

Most Read Articles
English summary
Royal Enfield Planning To Recall 650 Twins For Software Update. Read In Tamil.
Story first published: Friday, June 14, 2019, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X