54 ஆண்டுகளுக்கு பிறகு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 54 ஆண்டுகளுக்கு பின்னர் பைக் பந்தயத்தில் களமிறங்கி உள்ளது. இதற்காக, 2 புதிய பைக்குகளையும் தயாரித்துள்ளது. இந்த பைக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

உலகின் மிகவும் பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் பைக் பந்தயத்தில் களமிறங்கி உள்ளது. இதற்காக, இரண்டு ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளை பிரத்யேகமாக உருவாக்கி இருக்கிறது.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மையமும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹாரிஸ் பெர்ஃபார்மென்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த புதிய பந்தய பைக்குகளை உருவாக்கி இருக்கின்றன.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் ஏராளமான தொழில்நுட்ப மாறுதல்கள் மற்றும் வடிவமைப்பு மாறுதல்களுடன் இந்த இரண்டு பைக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. Nought Tea GT V2.0 என்ற பெயரில் இந்த இரண்டு பந்தய பைக்ககுளும் அழைக்கப்படுகின்றன.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

கடந்த மே மாதம் நடந்த பைக் ஷெட் ஃபெஸ்டிவல் என்ற மோட்டார்சைக்கிள் திருவிழா மூலமாக பொது பார்வைக்கு வந்த இந்த பைக்குகள் கடந்த வார இறுதியில் நடந்த பைக் ஷெட் பந்தயத்தின் மூலமாக களத்தில் இறங்கி உள்ளன. இந்த பந்தயத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளை ராயல் என்ஃபீல்டு பைக்குகள் பதிவு செய்துள்ளன.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

பந்தய களத்தில் பயன்படுத்துவதற்காக பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பைக்குகளும், சாதாரண கான்டினென்டல் ஜிடி 650 பைக்கைவிட 18.5 கிலோ எடை குறைவானது.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

இந்த பைக்குகளில் போர் செய்யப்பட்ட 750 சிசி திறன் கொண்ட எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

இந்த பைக்குகளில் பந்தயத்திற்கு தக்கவாறு பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு இருப்பது மட்டுமின்றி, இந்த பைக்குகளில் உள்ள இரட்டை சிலிண்டர் எஞ்சினின் திறனை உலகுக்கு பரைசாற்றும் விதமாக, மீண்டும் பந்தய களத்தில் இறங்க இருப்பதாக ராயல் என்ஃபீல்டு அதிகாரி அட்ரியன் செல்லர்ஸ் தெரிவித்துள்ளார்.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

இந்த இரண்டு பைக்குகளிலும் பந்தயங்களை எதிர்கொள்ள வசதியாக கஃபே ரேஸர் பைக்குகளுக்குரிய விசேஷ ஃபேரிங் பேனல்கள், எல்இடி விளக்குகள், செயின் ஸ்ப்ராக்கெட், புதிய சக்கரங்கள், விசேஷ சைலென்சர்கள், பிரெம்போ பிரேக் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

அதேபோன்று, பந்தய களத்தில் போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில், சிறப்பான கையாளுமையை வழங்கும் ஓலின்ஸ் நிறுவனத்தின் ஃபோர்க்குகள், கஸ்டமைஸ் வசதியுடன் புதிய க்ளிப் ஆன் ஹேண்டில்பார், சஸ்பென்ஷன்கள் உள்ளன. அடுத்து, எஞ்சின் செயல்திறனை கூட்டுவதற்காக விசேஷ ஏர் ஃபில்டர், மேம்படுத்தப்பட்ட இக்னிஷன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

54 ஆண்டுகளுக்கு பைக் பந்தயத்தில் களமிறங்கியது ராயல் என்ஃபீல்டு!

கடந்த 1965ம் ஆண்டு கடைசியாக ஜிபி5 250 என்ற ரேஸ் பைக்குடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது நேரடி அணியின் சார்பில் பைக் பந்தயத்தில் ஈடுபட்டது. அதன்பிறகு, 54 ஆண்டுகள் கழித்து, இப்போதுதான் மீண்டும் பந்தய களத்தில் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield has returned to the race track with two custom-built Continental GT 650 after 54 years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X