ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம், பிஎஸ்6 மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு ஆரஞ்ச் நிறத்தை கூடுதலாக வழங்கியுள்ளது. இதன் புகைப்படங்களை தகவல்களையும் இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள ஆரஞ்ச் நிற தேர்வில் தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்குகளை ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தது. ஆனால் தண்டர்பேர்டு 500எக்ஸின் தயாரிப்பு அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படவுள்ளதால், இந்த நிறத்தேர்வு அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

346சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினுடன் விற்பனையாகி வருகின்ற தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக் 5,250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படுவதால் இதன் என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்படவுள்ளது.

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் முதல் தண்டர்பேர்டு க்ரூஸர் பைக்கை 2002ல் அறிமுகம் செய்தது. அதன் பின் இந்த மாடலில் 350சிசி மற்றும் 500சிசி பைக்குகள் ஃபேஸ்லிஃப்ட் உடன் டிஸ்க் ப்ரேக், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் சில காஸ்மெட்டிக் பாகங்களின் வேறுபாட்டுடன் அறிமுகமாகின.

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

இதில் எக்ஸ் சீரிஸ் பைக்குகள் முதன்முதலாக கடந்த 2018ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில் அறிமுகமான தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக் தண்டர்பேர்டு 350சிசி பைக்கை விட சில காஸ்மெட்டிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை கொண்டிருந்தது. ப்ரீமியம் விலையில் இந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதால் இளைஞர்களிடையே தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

500சிசி விற்பனையாகி வரும் புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் பைக்குகளின் தயாரிப்பு அடுத்த ஆண்டில் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம், இந்த பைக்குகளை அடுத்த ஆண்டு இந்தியா முழுவதும் அமலாக உள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான். ஏனெனில் 500சிசி பைக்குகளை பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றுவது அதிக செலவு கொண்ட வேலையாக இருக்கிறதாம்.

Most Read:2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

இதனால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 350 சீரிஸ் பைக்குகள் மட்டும் தான் பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட தண்டர்பேர்டு 350 உள்ளிட்ட இந்நிறுவனத்தின் பைக்குகள் கடந்த சில வாரங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

கடைசியாக தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய பைக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

ராயல் எண்ட்பீல்டின் 2020 தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக் மீண்டும் சோதனை ஓட்டம்...

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

இதனால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 பைக்குகளின் அறிமுகத்தை 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பாகவே எதிர்பார்க்கலாம். இவ்வாறு முன்னதாகவே அறிமுகமாகவுள்ள பைக்குகள் குறித்து தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

ஆரஞ்ச் நிறத்தில் அறிமுகமாகும் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளியாகி வரும் 650சிசி பைக்குகளும் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் பிஎஸ்6 பைக்குகள் அனைத்தும் புதிய ஃப்ளாட்ஃபாரத்தின் மூலமாக தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles

English summary
Royal Enfield’s Thunderbird 350X will be receiving a brand new Getaway Orange paint scheme in next month
Story first published: Saturday, December 14, 2019, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X