புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

நாடு முழுவதும் 300 புதிய மினி பைக் ஷோரூம்களை திறக்க இருப்பதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

நடுத்தர ரக பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக வலுவான சந்தையை பெற்றிருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளை குறிவைத்து களமிறக்கப்பட்ட ஜாவா மற்றும் பெனெல்லி நிறுவனங்களின் புதிய மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

எனவே, வரும் காலத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்காக அளவில் சிறிய வகையிலான மினி பைக் ஷோரூம்களை திறக்க உள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

நாடு முழுவதும் 932 பைக் ஷோரூம்களுடன் மிக வலுவான டீலர் கட்டமைப்பை ராயல் என்ஃபீல்டு பெற்றிருக்கிறது. இந்த ஷோரூம்கள் அனைத்தும் பெரிய அளவிலான ஷோரூம்கள். இந்த சாதாரண வகை ஷோரூம்கள் 2,000 முதல் 4,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகின்றன.

புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

ஆனால், புதிதாக திறக்கப்பட இருக்கும் மினி பைக் ஷோரூம்கள் 500 முதல் 600 சதுர அடி பரப்பை கொண்டதாக இருக்கும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இந்த புதிய மினி ஷோரூம்கள் திறக்கப்படும் என்று ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. ஸ்டூடியோ ஷோரூம்கள் என்ற பெயரில் இவை குறிப்பிடப்படுகின்றன.

புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

குறைவான முதலீட்டில் இந்த ஷோரூம்களை டீலர்கள் திறக்க முடியும். இந்த ஷோரூம்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான முதலீட்டில் திறக்க முடியும். மேலும், இயக்குதல் செலவும், குறைவான பணியாளர்களை வைத்து இயக்க முடியும் என்பதால் இந்த முடிவை ராயல் என்ஃபீல்டு எடுத்துள்ளது.

Most Read: இனி சாலையிலும் ரயில்கள் பறக்கும்... ஆனால், இது வேற மாதிரியான ரயில்.. மத்திய அரசு புதிய திட்டம்..!

புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

வரும் மார்ச் மாதத்திற்குள் 200 முதல் 300 மினி ஷோரூம்களை திறக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இதுவரை பரீட்சார்த்த முறையில் திறக்கப்பட்ட சில ஸ்டூடியோ ஷோரூம்கள் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்திருக்கிறதாம். அதாவது, மாதத்திற்கு சராசரியாக 8 முதல் 10 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவிக்கிறது.

Most Read: ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலையும் உயர்கிறது

புதிதாக 300 ஸ்டூடியோ வகை பைக் ஷோரூம்களை திறக்கும் ராயல் என்ஃபீல்டு!

புதிய ஸ்டூடியோ ஷோரூம்கள் வாயிலாக விற்பனையை வெகுவாக உயர்த்த முடியும் என்று ராயல் என்ஃபீல்டு நம்புகிறது. இந்த ஷோரூம்கள் கிராமப்புற வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக நெருக்கமான சேவையை வழங்கும்.

Most Read Articles

English summary
Royal Enfield has announced that the company will open 300 new studio showrooms in rural areas before end this fiscal year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X