ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

ஃப்ளாட் டிராக் வகை பந்தயத்திற்கான விசேஷ ரேஸ் பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

நம் நாட்டின் மிகவும் பாரம்பரியம் மிக்க பைக் நிறுவனமாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறை மீது மீண்டும் தீவிர கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. அண்மையில் தனது 650 பைக்குகளின் அடிப்படையிலான ரேஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது.

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

இதைத்தொடர்ந்து, தற்போது ஃப்ளாட் டிராக் பந்தயத்திற்கான விசேஷ கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பொருந்திய புதிய ரேஸ் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் இந்த புதிய பைக் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 பைக்குகளின் அடிப்படையில் பாடி பேனல்கள் அதிகம் இல்லாதவாறு, விசேஷ ஹேண்டில்பார் மற்றும் கால் வைக்கும் ஃபுட்பெக்குகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கான ஸ்விங் ஆர்ம் எனப்படும் பின்சக்கரத்தை சேஸீயுடன் இணைக்கும் அமைப்பை ஹாரிஸ் பெர்ஃபார்மென்ஸ் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

இன்டர்செப்டார் 650 பைக்கில் இருக்கும் அதே டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் முன்புறத்தில் உள்ளன. அதேநேரத்தில், பின்புறத்தில் ஓலின்ஸ் மோனோ ஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 19 அங்குல சக்கரங்கள் மற்றும் டியூவல்-ஸ்போர்ட் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

இந்த பைக்கின் 650 சிசி எஞ்சின் எஸ் அண்ட் எஸ் பிக் போர் கிட் மூலமாக 750 சிசி அளவுக்கு போர் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், 650 சிசி பைக்குகளைவிட அதிக செயல்திறனை வெளிப்படுத்தும்.

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

இந்த பைக்குகளை விற்பனை செய்யும் திட்டம் ராயல் என்ஃபீல்டு வசம் இல்லை என்று தெரிகிறது. ஆனால், சொந்தமாக ஃப்ளாட் டிராக் வகை ரேஸ் பந்தயத்தை நடத்துவதற்கும், அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்த பைக்குகளை பயன்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Most Read: அதிர வைக்கும் சம்பவம்... காரை பிடித்து வைத்து கொண்டு 10 லட்சம் கட்ட சொல்லும் போலீஸ்... ஏன் தெரியுமா?

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

இதனிடையே அண்மையில் நடந்த ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா என்ற பைக் திருவிழாவில் ஹிமாலயன் அடிப்படையிலான ஃப்ளாட் டிராக் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக் FT411 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக் அமெரிக்காவில் உள்ள எஸ் அண்ட் எஸ் நிறுபவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

Most Read: பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

இந்த எஃப்டி411 பைக்கில் உயர்த்தப்பட்ட அமைப்பிலான புகைப்போக்கி, இலகு எடையிலான கார்பன் ஃபைபர் இருக்கை, 18 அங்குல ஸ்போக் சக்கரங்கள், ஃப்ளாட் டிராக்கிற்கான விசேஷ ஸ்பிராக்கெட் அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லைடு ஸ்கூல் என்ற பெயரில் நடத்தப்பட உள்ள ஃப்ளாட் டிராக் ரேஸ் பயிற்சியின்போது இந்த பைக் பயன்படுத்தப்பட இருக்கிறது.

Most Read: கருப்பு வெள்ளிக்கிழமைக்காக கருப்பு உடையில் கருப்பு நிற காரை வாங்கிய பிரபல நடிகை... யார் தெரியுமா..?

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

ப்ளாட் டிராக் ரேஸ்

ஒழுங்குப்படுத்தப்படாத பந்தய களத்தில் நடைபெறும் ஃப்ளாட் டிராக் பைக் பந்தயம் மேலை நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. இதனை டர்ட் டிராக் ரேஸிங் என்றும் குறிப்பிடுகின்றனர். பிற பைக் பந்தயங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகவும், விறுவிறுப்பாக இருக்கும்.

ஃப்ளாட் டிராக் பந்தய வகை பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு!

கோள வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும் பந்தய களங்களில் இந்த ஃப்ளாட் டிராக் பந்தயத்திற்கான பைக்குகள் விசேஷ தொழில்நுட்ப அம்சங்களையும், வீரர்கள் அதிக யுக்திகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த வகை ரேஸ் பைக்குகளில் பிரத்யேக பிரேக் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் கொடுக்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Day one of Rider Mania 2019 had Royal Enfield announce the launch of their 'Slide School', and had them unveil a custom Royal Enfield Himalayan Flat Tracker. The Flat Tracker is basically a stripped down version of the stock Himalayan 401.
Story first published: Saturday, November 30, 2019, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X