சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

சென்னையில் உள்ள இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் எண்ட்பீல்டு தனது இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 மாடல் பைக்குகளில் மிக சிறிய அளவிலான அப்டேட்களை கொண்டு வந்துள்ளது. மேலும் இதனால் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இந்த 650 ட்வின்ஸ் பைக்குகளில் பாதுகாப்பு சம்பந்தமான அப்டேட்களையே ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதாவது இந்த பைக்குகளில் வெளிச்சத்தை அதிகரிக்கும் விதமாக நேர்த்தியான லென்ஸ் உடன் ஹெட்லைட்டை இந்நிறுவனம் மாற்றியுள்ளது. ஆனால் பல்ப் மாற்றப்படவில்லை.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இது மட்டுமல்லாமல் பைக் தனித்து தெரிவதற்காக பளிச்சிடும் வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் வெளிப்புற பாகங்கள் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளன. இந்த அப்டேட் செய்யப்பட்ட இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 பைக்குகளை வாங்க டீலர்கள் தயாராக உள்ளனர்.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இருப்பினும் இந்த பைக்குகளை டீலர்களுக்கு இந்நிறுவனம் வழங்கவில்லை. இவ்வளவு ஏன், இந்த அப்டேட்கள் குறித்த எந்தவொரு தகவல்களையும் கூட அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிக்க ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்போதைக்கு விரும்பவில்லை.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இண்டர்நேஷனல் பைக்குகளின் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்குகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது என கூறப்படுகிறது.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ள இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 பைக்குகள் இரண்டும் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு இணையான ட்வின் என்ஜினுடன் 47 பிஎச்பி பவரையும் 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றின் என்ஜின்களுடன் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இண்டர்செப்டர் 650, கிளிட்டர் மற்றும் தூசி, சில்வர் ஸ்பெக்டர், பேக்கர் எக்ஸ்பிரஸ், மார்க் த்ரி, ஆரஞ்ச் மற்றும் அழகிய சிவப்பு என 6 விதமான நிறங்களில் விற்பனையாகி வருகிறது. இதன் விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.2.51 லட்சத்திலிருந்து ரூ.2.71 லட்சம் வரை விற்கப்படுகிறது.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

கான்டினென்டல் ஜிடி650, ப்ளாக் மேஜிக், Dr.மேஹெம், ஐஸ் குயின், வென்சுரா நீலம் மற்றும் மிஸ்டர் க்ளீன் என 5 விதமான நிறங்களில் விற்பனையாகிறது. எக்ஸ்ஷோரூம்களில் இதன் விலை ரூ.2.72 லட்சத்திலிருந்து ரூ.2.92 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் மிக சிறந்த பைக்குகளாக இந்த இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 மாடல்கள் உள்ளன. ஏனெனில் இந்த பைக்குகளில் மறுசுழற்ச்சி செய்யக்கூடிய, சிறந்த ஆற்றலை வெளியிடும் என்ஜின்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறிய அப்டேட்... இண்டர்நேஷனல் தரத்திற்கு மாற்றப்பட்ட ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

அதுமட்டுமல்லாமல் 650சிசி திறனுக்கு ஏற்ற விலையை விட குறைவான விலையில் தான் இந்த இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 பைக்குகள் விற்கப்படுகின்றன. இப்போது கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ள தெளிவான வெளிச்சத்தை தரக்கூடிய லென்ஸ் அப்டேட் இன்னும் இந்த பைக்கின் தரத்தை உயர்த்தும் என்பது நிச்சயம்.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor And Continental GT 650 Twins Receive Minor Upgrades
Story first published: Thursday, October 24, 2019, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X