எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதை முதல்முறையாக ராயல் என்ஃபீல்டு உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

மின்சார வாகனத் தயாரிப்பில் அனைத்து வாகன நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. ஆனால், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருந்து மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பு குறித்து எந்த தகவலும இதுவரை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதை அந்நிறுவனத்தின் சிஇஓ வினோத் தாசரி உறுதிப்படுத்தி உள்ளார்.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

ஜாவா, பெனெல்லி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து கடுமையான சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டத்திற்கு வர்த்தகத்தை கொண்டு செல்வதற்கான பணிகளில் ராயல் என்ஃபீல்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மாடல்ககளை அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வலுவடையத் துவங்கி இருக்கிறது.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் இல்லாமல் வர்த்தகத்தை தொடர்ந்து வலுவாக கொண்டு செல்ல முடியாது. பல நிறுவனங்கள் இப்போதே எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

இந்த விலையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட்டை மனதில் வைத்து புதிய மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு புதிய மோட்டார்சைக்கிள் உருவாக்கப் பணிகளுக்காக ரூ.700 கோடியை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்தது.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

இந்த முதலீட்டை பயன்படுத்தி, மின்சார மோட்டார்சைக்கிள் மாடலின் உருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் உறுதியாகி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு தக்கவாறு, சக்திவாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

அதேநேரத்தில், இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை சோதனைகளுக்கு உட்படுத்தி சந்தைக்கு கொண்டு வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. அதாவது, வரும் 2022-23ம் ஆண்டு காலக்கட்டத்தில் ராயல் என்ஃபீல்டு களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பை உறுதிப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு!

இன்னும் மூன்று ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பும் ஓரளவு வலுப்பெற்றிருக்கும். அப்போது அறிமுகம் செய்தால் சந்தையின் வர்த்தக ஓடத்திற்கு இணையாக செல்ல முடியும் என்று ராயல் என்ஃபீல்டு கருதுகிறது.

Source: ET Auto

Most Read Articles
English summary
Royal Enfiled has revealed of its future business pland including the development of electric motorcycles.
Story first published: Thursday, November 28, 2019, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X