புது தொழிலில் களமிறங்கும் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனைச் செய்து வரும் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் புதிய தொழில் ஒன்றில் களமிறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, தற்போது இ-சைக்கிளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிநவீன வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது இந்த நிறுவனம் மலிவான விலையில் அதிக தொழில்நுட்பங்களைக் கொண்ட இ-சைக்கிள்களை சைனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

சியோமி நிறுவனம், ஹிமோ சி20 எனப்படும் இ-சைக்கிளைத் தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு, சைனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது மலிவான விலையா..? என கேள்வியெழும்பினால், ஆம் இது மலிவான விலைதான். ஏனென்றால் தற்போது விற்பனையில் இருக்கும் இ-சைக்கிளைக் காட்டிலும் இது மலிவான விலையில், அதிக தொழில்நுட்பங்களைக் கொண்ட மாடலாக இருக்கிறது.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

அவ்வாறு, இந்த இ-சைக்கிளில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, நிஃப்டி எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதில், இ-சைக்கிளின் வேகம், கிலே மீட்டர்கள், பெடல் அசிஸ்ட் லெவல், பேட்டரி பவர் மற்றும் சார்ஜிங் அளவு ஆகியவை குறித்த தகவலை இது வழங்கும். மேலும், இந்த சைக்கிளில் புதுமையாக இதன் இருக்கையை ஏர் பம்ப் மூலம் உயர்த்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

இ-சைக்கிளில் சிறப்பான சக்தியை வழங்கும் விதமாக 36V 10Ah லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் எடை வெறும் 2.5கிலோ தான் இது 360Wh சக்தியை சேகரிக்கும் திறன் கொண்டது. அதேபோன்று, இந்த பேட்டரியை ஒரு முறையை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும்.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

இதைத்தொடர்ந்து, இ-சைக்கிளில் 250வாட் திறன் கொண்ட டிசி பிரஸ்லெஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, இந்த இ-சைக்கிளை மணிக்கு 25 கிமீ வேகத்தில் செலுத்த உதவும். இதேபோன்று, இதில் மூன்று லெவல் பெடல் அசிஸ்ட்டும், 6 ஸ்பீடு சிமனோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த இ-சைக்கிளை கையாள்வதும் எளிதான காரியமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த இ-சைக்கிளின் ஹேண்டில் பார்களை ஃபோல்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறுகலான சாலை மற்றும் சைக்களை வெளி இடங்களுக்கு ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும். சைக்கிளின் இரு பக்கங்களிலும் 20 இன்ச் கொண்ட வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், நல்ல திடமான டயர்கள் சாலையில் ஸ்மூத்தாக செல்வதற்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளது.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

மேலும், இ-சைக்கிள் வேகமாகச் செல்லும்போது எளிதில் கட்டுப்படுத்தும் விதமாக டிஸ்க் பிரேக்குடன் கூடிய சிபிஎஸ் பிரேக்கிங் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இது சைக்கிள் ஓட்டியின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இத்தகைய பிரத்யேகமான அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஹிமோ சி20 இ-சைக்கிளின் ஒட்டுமொத்த எடை வெறும் 21 கிலோவாக இருக்கிறது.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

இந்த புதிய மாடல் இ-சைக்கிள் தற்போது சைனாவில் மட்டும் தான் விற்பனையாகி அறிமுகமாகியுள்ளது. மேலும், இதனை இ-காமர்ஸ் எனப்படும் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யும் முயற்சியில் சியோமி நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

புது தொழிலில் களமிறங்கிய பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்: எந்த நிறுவனம் தெரியுமா...?

ஆகையால், சியோமியின் இந்த புதிய மாடல் இ-சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வர கூடுதல் காலம் எடுக்கும் என தெரிகிறது. இந்த இ-சைக்கிளுக்கு நிகராக டிரான்க்ஸ் ஒன் மற்றும் ஹூரோ இ-ஜெப்பீர் ஆகிய இரண்டு மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Xiaomi’s Launches New Himo C20 E-Bike - A Single Charge Can Cover 80km. Read In Tamil.
Story first published: Saturday, April 13, 2019, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X