"எனக்கு இப்படி ஒரு பரிசா" - தந்தைக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மகன்.. அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா?

தந்தையை மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் இன்ப அதிர்ச்சியான பரிசு ஒன்றை அவரது மகன் வழங்கியுள்ளார். அப்படி என்ன பரிசினை அவர் வழங்கினார் என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் உள்ள தந்தைகள் தங்களின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தன் மகன் மற்றும் மகள்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஓர் பொருளை யாருமே எதிர்பாராத நேரத்தில் அவர்களின் கண்களின் முன்பே கொண்டு நிறுத்தி பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்வதுண்டு.

இதேபோன்று, சில மகன்கள் மற்றும் மகள்களும் பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசளிப்பதுண்டு.

இத்தகைய ஓர் சம்பவம்தான் தலைநகர் டெல்லியில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்த வீடியோவை அஸ்வின் சிங் தக்கியர் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் தந்தைக்கு மகன் ஆச்சரிய பரிசாக சுஸுகி நிறுவனத்தின் இன்ட்ரூடர் க்ரூஸர் ரக பைக்கை பரிசாக வழங்குகிறார். இதனை நீங்கள் கீழே காணலாம்.

சுஸுகி நிறுவனம் இன்ட்ரூடர் எம்1800 ஆர் பைக்கை இந்தியாவில் இருந்து விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த மாடல் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. இருப்பினும், தனது தந்தைக்கு மிகவும் பிடித்த மாடல் என்பதால் இதற்கு முன்பாக பயன்படுத்தி வந்த ஓர் நபரிடம் இருந்து செகண்ட் ஹேண்ட் பைக்காக டெல்லியைச் சேர்ந்த அந்த இளைஞர் தன் தந்தைக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

சுஸுகி இன்ட்ரூடர் எம்1800ஆர் பைக் இந்தியாவில் ரூ. 16 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், ஆன்-ரோடில் இந்த பைக் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டது.

எனவே, இந்த பைக் இந்தியாவில் கணிசமான விற்பனையையேப் பெற்று வந்தது. ஆகையால், இந்தியாவில் இருந்து திரும்பிப் பெறும் விதமாக இன்ட்ரூடர் பைக்கின் விற்பனையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஸுகி நிறுத்திக் கொண்டது.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில், "செகண்ட் ஹேண்ட் பைக்குகளை விற்பனைச் செய்யும் ஷோரூமிற்கு தந்தையை திடீரென அழைத்துச் சென்ற அந்த இளைஞர், சுஸுகி இன்ட்ரூடர் பைக்கை அவரது தந்தைக்கு பரிசாக வாங்கிக் கொடுப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. புத்தம் புதிதாகக் காணப்படும் அந்த பைக்கிற்கு ரூ. 10 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், கடைசியாக என்ன விலைக்கு அது வாங்கப்பட்டது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

MOST READ: ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

சுஸுகி இன்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கில் மிகப்பெரிய அளவிலான 1,783 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய வி-ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 127 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்ககையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

MOST READ: பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்.. காரணம் என்ன தெரியுமா?

சுஸுகியின் இந்த க்ரூஸர் ரக பைக்கில் வி-ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருப்பதால், இது குறைந்த அளவிலான முறுக்கு விசையை வெளிப்படுத்துகிறது. இது பல புதிய ரைடர்களுக்கு புதுவிதமான ரைடிங் அனுபவத்தை ஏற்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜின் எலக்ட்ரானிக்கல் முறையில் டிரான்ஸ்மிஷனைக் கட்டுபடுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

MOST READ: மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

மேலும், இந்த பைக்கின் பிரம்மாண்டமான தோற்றத்திற்கேற்ப 240 மிமீ அளவுள்ள மிகப் பெரிய அளவுள்ள கிராஸ்-செக்சன் டயர் பின்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அளவில் இந்தியாவில் கிடைக்கும் முதல் பைக் இதுவே ஆகும்.

எனவே, இந்த பைக்கைப் பெற்ற நபர் மிகுந்த ஆச்சரியமடைந்ததற்கு தகுந்த காரணம் உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son Gifts Dad A Suzuki Intruder SuperBike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X