சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், சுஸுகி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மட்டும் சத்தமே இல்லாமல் புரட்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஸ்கூட்டர்களின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. 2017-18ம் நிதி ஆண்டில் 67.2 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் 67 லட்சம் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இது, ஒட்டுமொத்தமாக 0.27 சதவீதம் வீழ்ச்சியாகும்.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பைக்குகளின் விற்பனையும் மந்தமான நிலையிலேயே காணப்படுகிறது. அவ்வாறு, உள்நாட்டு இருசக்கர வாகனங்களின் விற்பனையானது 17.31 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், ஹீரோ, ஹோண்டா மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

இதைத்தொடர்ந்து, கார்களின் விற்பனையும் 5 ஆண்டுகளுக்கு பின் சரிவை சந்தித்துள்ளன. இதனால், வாகன உற்பத்தி மற்றும் அதனை சார்ந்து இயங்கும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

இவ்வாறு, இந்திய வாகனச் சந்தை 13 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைக் காண, எரிபொருள் விலை உயர்வு, காப்பீட்டு பிரிமீயம் தொகை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, வேலை இல்லா திண்டாட்டம் உள்ளிட்டவையே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் இதுபோன்று விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், சுஸுகி நிறுவனத்தின் அக்செஸ் ஸ்கூட்டர் மட்டும் சத்தமே இல்லாமல் புரட்சியைச் செய்துள்ளது. ஆம், அனைத்து நிறுவனங்களின் வாகனங்களும் வீழச்சியை சந்தித்து வரும்நிலையில், சுஸுகி நிறுவனத்தின் அக்செஸ் ஸ்கூட்டர் மட்டும் விற்பனையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

அந்த வகையில், 2019 மார்ச் மாதத்தில் அக்செஸ் 125சிசி ஸ்கூட்டர் 49 ஆயிரத்து 875 ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டு மார்ச் மாதத்தில் பார்த்தோமேயானால் 36 ஆயிரத்து 555 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த இரண்டு விற்பனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 36 சதவீதம் வளர்ச்சியாகும்.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

இதேபோன்று, சுஸுகி நிறுவனத்தின் அக்செஸ் ஸ்கூட்டர் மட்டுமின்றி, மற்ற மாடல் இருசக்கர வாகனங்களும் 2019 மார்ச் மாதத்தில் 25.3 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளன. அவ்வாறு, நடப்பு நிதியாண்டில் 58 ஆயிரத்து 696 யூனிட் சுஸுகி இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

அதுவே கடந்த வருடத்தில் பார்த்தால், 46 ஆயிரத்து 848 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. ஆனால், இந்த விற்பனையும் சுஸுகி நிறுவனத்திற்கு முக்கிய விற்பனை வளர்ச்சியாகத் தான் இருந்தது. ஏனென்றால், இதுவும் கடந்த வருடத்தைக்காட்டிலும் வளர்ச்சி அதிகமாகும்.

சத்தமின்றி புரட்சி செய்த சுஸுகி அக்செஸ்: இதற்கு மட்டும் ஏன் இந்த கரிசணம் இந்தியர்கள் மத்தியில்!

சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரில் 124சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இத்துடன், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஒற்றை ஷாக் அப்சார்பர் கொண்ட மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Suzuki Access Posts 36% Growth In March 2019. Read In Tsamil.
Story first published: Saturday, April 20, 2019, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X