விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

சுஸுகி நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றான பர்க்மேன் ஸ்கூட்டர் புதிய வண்ணத்தில் காட்சியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

வாகனங்கள் சார்ந்த செய்தியை வெளியிடும் தளமான மோட்டாராய்ட்ஸ், சுஸுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடல் ஸ்கூட்டருடைய ஸ்பை படத்தை வெளியிட்டுள்ளது. தற்போது புகைப்படம் மூலம் காட்சிக்குள்ளாகியிருக்கும் இந்த ஸ்கூட்டர்தான், விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது.

ஸ்பை படங்களை நீங்கள் கீழே காணலாம்...

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

சுஸுகி நிறுவனம், இந்திய ஸ்கூட்டர் சந்தையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக மேக்ஸி ரகத்திலான பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ரகத்திலான ஸ்கூட்டருக்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

அந்தவகையில், பர்க்மேன் ஸ்கூட்டரின் லுக் மற்றும் டிசைன் தாத்பரியங்கள் காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு நிலவியது. இதற்கு, ஸ்கூட்டரின் புத்தம் புதிய துடிப்பான ஸ்டைலும், திறனும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

இதன்காரணமாக, சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர், இந்திய ஸ்கூட்டர் சந்தையில் குறுகிய காலத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து, வெற்றிகரமான ஸ்கூட்டராக மாறியது.

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் மூன்று விதமான வண்ணத்தேர்வில் கிடைக்கின்றது. அந்தவகையில், மெட்டாலிக் மேட் ஃபிப்ரோய்ன் க்ரே, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் பியர்ல் மிராஜ் ஒயிட் ஆகிய நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கின்றது.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்நிலையில், புதிதாக களமிறங்க இருக்கும் பர்க்மேன் ஸ்கூட்டர் மேட் பிளாக் வண்ணத்தில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதுகுறித்த ஸ்பை படங்களே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய வண்ணத் தேர்வால், தற்போது சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நான்கு விதமான நிறத் தேர்வில் அதன் ரசிகர்களுக்கு கிடைக்க இருக்கின்றது.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

தற்போது விற்பனையில் இருக்கும் சுஸுகி பர்க்மேன் 125 ரூ. 70,878 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது, மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதே விலையை, ஸ்பை படத்தின்மூலம் காட்சிக்குள்ளாகியிருக்கும் புதிய வண்ண பர்க்மேனும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

ஏனென்றால், நிற மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் இந்த அப்கமிங் பர்க்மேன் பெறவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், விற்பனையில் இருக்கும் பர்க்மேன் 125 மாடலில் இருக்கும் அதே சிறப்பம்சங்கள்தான், அறிமுகத்திற்காக காத்திருக்கும் பர்க்மேன் ஸ்கூட்டரிலும் இடம்பெற்றிருக்கின்றது. மேலும், இந்த ஸ்கூட்டர்கள் சுஸுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும் அக்செஸ் 125 ஸ்கூட்டரில் உள்ள சில சிறப்பம்சங்களையும் பெற இருக்கின்றது.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில், டிஆர்எல்களைக் கொண்ட எல்இடி தரத்திலான ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, அதன் டெயில் லைட்டும் எல்இடி தரத்திலேயே காட்சியளிக்கின்றது. மேலும், முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் செல்போனைச் சார்ஜ் செய்துகொள்ள ஏதுவான யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை, நவீன வசதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

அதேசமயம், மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் மிகப் பெரிய ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பல விஷயங்களில் சிறப்பான மதிப்பைப் பெற்றிருக்கும் பர்க்மேன் ஸ்கூட்டர், அதன் சக்கர அளவில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது. இது, அதன் ஷூர் அளவைக் காட்டிலும் குறைவாக இருக்கின்றது.

விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள சுஸுகி: புதிய நிறத்தில் காட்சியளித்த பர்க்மேன்...

தற்போது விற்பனையில் இருக்கும் சுஸுகி பர்க்மேனில் உள்ள அதே எஞ்ஜின்தான், புதிதாக களமிறங்க உள்ள பர்க்மேனில் இடம் பெற்றுள்ளது. இந்த எஞ்ஜின் 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின் சிறப்பான பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இது, நகர் புறச் சாலையில் எளிதாக மற்ற வாகனங்களைக் கடந்து செல்லும் அளவிற்கு திறன் கொண்டது.

Most Read Articles

English summary
Suzuki Burgman Street 125 Will Now Get A New Matte Black Paint Scheme. Read In Tamil.
Story first published: Friday, July 12, 2019, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X