புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

சுஸுகி நிறுவனம், புதிய லுக்கிலான அட்வென்சர் ரக பைக்கை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள்குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அண்மைக் காலங்களாக, இந்திய சந்தையைக் குறி வைத்து அதன் தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், இந்தியர்களை கவரும் வகையில் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட அடுத்த தலைமுறை ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்களை அந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

இத்துடன், ஹை எண்ட் மாடலை தழுவி உருவாகி வரும் இன்ட்ரூடர் க்ரூஸர் ரக பைக்கையும், அந்நிறுவனம் இந்த வரிசையில் கூடிய விரைவில் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு புதிய ரக பைக்கை இந்தியர்களுக்கென பிரத்யேகமாக களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

இந்த பைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வி-ஸ்டார்ம் 650 எக்ஸ்டி மாடலைத் தழுவி, சிறிய ரகத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

இந்த பைக்குறித்த ஸ்கெட்ச் படத்தை நீங்கள் கீழே காணலாம்...

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

மேலும் இந்த பைக், பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ராயல்என்பீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 மற்றும் கேடிஎம் 390 அட்வென்சர் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் தயாராகி வருகின்றது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

என்ட்ரீ லெவல் அட்வென்சர் ரகத்தில் தயாராகி வரும் இந்த மோட்டார்சைக்கிள் இருவிதமான பயன்பாட்டில் கலக்க இருக்கின்றது. அதற்கேற்ப வகையில், ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 மாடலைப்போன்று பரந்த அமைப்பு வழங்கப்பட உள்ளது. இத்துடன், அனைவரையும் கவருகின்ற வகையிலான சிறப்பம்சங்களும் இதில் இணைக்கப்பட உள்ளது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

சுஸுகி நிறுவனம், இந்த பைக்கை பல ஆய்வுகளுக்கு பின் தயார் செய்ய இறுப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், தற்போது அட்வென்சர் ரகத்தில் விற்பனையாகும் பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் சிறப்பம்சங்கலை இது பெறவிருக்கின்றது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

அதற்கேற்ப, இந்த பைக்கில் 250 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினை பொருத்த இந்த ஜப்பானிய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே எஞ்ஜின்தான், புத்தம் புதிய ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மடாலில் இடம்பெற்றிருக்கின்றது. ஆகையால், இந்த பைக்கிற்கு சற்றும் குறையாத திறனை வி ஸ்டார்ம் 250 பைக்கும் வெளிப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

இத்துடன், உற்பத்தி செலவை குறைக்கும் விதமாக, இந்த புதிய பைக்கை, ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலை தயாரித்த அதே பிளாட்பாரத்தில் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், முற்றிலும் வித்தியாசமான சப் ஃபிரேம்கள் இந்த அட்வென்சர் ரக பைக்கிற்கு கொடுக்கப்பட உள்ளது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

கூடுதலாக, இந்த பைக்கின் சஸ்பென்ஷன் சிறப்பான அம்சத்தைப் பெறவிருக்கின்றது. அவ்வாறு, நீண்ட தூர மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு பயன்படுகின்ற வகையிலான சிறப்பம்சத்தை அது பெறவிருக்கின்றது.

மேலும், இந்த பைக்கின் வெளிப்புற தோற்றத்தைப் பார்த்தோமேயானால், வி-ஸ்டார்ம் 650 பைக்கைப் போன்ற காட்சியளிக்கலாம் என எதிர்பார்க்கின்றது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

சுஸுகி நிறுவனம் இந்த பைக்கை ஜப்பானிய கை வண்ணத்தில் தயார் செய்தாலும், இந்தியர்களின் ரசனைக்கு ஏற்ப உருவாக்க இருக்கின்றது. அதற்கேற்ப வகையில், இந்த பைக் இந்திய எஞ்ஜினியரிங் உள்ளீடுகளைப் பெற உள்ளது.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

ஆகையால், இந்தியாவிற்காக களமிறங்கும் வி ஸ்டார்ம் 250 பைக் இலகுவாகவும், சற்று பருமனாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. அதேசமயம், இந்த பைக் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், சர்வதேச சந்தையை கருத்தில் கொண்டும் இந்த பைக், முதல் தரத்தில் தயாராக உள்ளது வி-ஸ்டார்ம் 250 பைக்.

புதிய 250 சிசி திறனுள்ள பைக்கை தயாரிக்கும் சுஸுகி... ஸ்கெட்ச் படம் கசிந்தது!

தற்போது, இந்த பைக்கின் தயாரிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது. இது அடுத்த இரண்டு வருடங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு, களமிறங்கும்பட்சத்தில் அது ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சம் வரை விலையைப் பெறலாம்.

Most Read Articles
English summary
Suzuki Developing Entry-Level Adventure Bike. Read In Tamil.
Story first published: Saturday, August 3, 2019, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X