கோவையில் சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஜிக்ஸெர் கோப்பைக்கான பைக் பந்தயத்தை கோவை கரி மோட்டார் பந்தய களத்தில் நடத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களும் பங்கேற்கும் வகையில் என்டியூரன்ஸ் வகை பைக் பந்தயத்தையும் நடத்தியது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

இந்த ரேஸின்படி யார் அதிக நேரம் களத்தில் இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். எரிபொருளை தேவையான அளவு அவ்வப்போது நிரப்பி கொள்ளலாம்.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

கணிக்கவே முடியாத பல கூறுகள் இந்த ரேஸில் உள்ளதால் இது பைக்கை ஓட்டுபவருக்கும் பைக்கின் இயந்திரத்திற்கும் மிக பெரிய அழுத்ததை தரக்கூடியது. 24 மணிநேரங்கள் நடைபெற கூடிய பாரம்பரிய என்டியூரன்ஸ் ரேஸ் போட்டிகள் பைக்கை ஓட்டுபவருக்கு இன்னும் அதிகளவில் மன அழுத்தத்தை தரும்.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

ஆனால் இந்த என்டியூரன்ஸ் வகை ரேஸ் வெறும் 40 நிமிடங்களில் முடிந்துவிட்டதால், பைக்கை ஓட்டுபவருக்கு அவ்வளவாக மன அழுத்தம் இல்லை. இதனால் இந்த ரேஸின் மூலம் என்டியூரன்ஸ் ரேஸ் போட்டி என்ன அனுபவத்தை தருமோ அதை குறுகிய காலக்கட்டத்திலேயே இப்போட்டியில் கலந்தகொண்ட ரேஸர்கள் அடைந்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

சுசுகி நிறுவனம் இந்த போட்டியில் சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலை ஈடுப்படுத்தியிருந்தது. இந்த ஜிக்ஸெர் ரேஸ் போட்டியை சுசுகி நிறுவனம் நடத்துவதற்கு காரணம், மோட்டார்ஸ்போர்ட் துறையில் இருக்கும் திறமையான இளம் வீரர்களை ஆரம்ப நிலையில் இருந்து கண்டறிந்து ஊக்குவிப்பதே ஆகும். இந்த போட்டி தொடர்களை 2015ஆம் ஆண்டில் இருந்தே சுசுகி நிறுவனம் நடத்தி கொண்டு வருகிறது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

மிக விரைவிலேயே இந்த ரேஸ் போட்டி, பைக் பிரியர்களிடையே பிரபலமாகிவிட்டது. தற்போது 2019ல் நடைபெற்றுள்ள இந்த போட்டி நான்கு சுற்றுகளை கொண்டிருந்தது. இந்த ரேஸ் போட்டி தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலும் நொய்டாவில் உள்ள புத் இண்டர்நேஷ்னல் பைக் ரேஸ் களத்திலும் நடைபெற்று வருகிறது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோ ஜிபி பைக்குகளையும் சுசுகி நிறுவனம் ஈடுப்படுத்தியிருந்தது. இதற்கு முன்னதாக அறிமுகமாவதற்கு முன்பே கடந்த மே மாதத்தில் நொய்டா இண்டர்நேஷ்னல் மைதானத்தில் நடைபெற்ற போதும் இந்த ஜிக்ஸெர் 250 மோட்டோ ஜிபி பைக்குகள் தயாரிக்கப்பட்ட வரையில் ஈடுப்படுத்தப்பட்டன.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக், ட்ராக்கில் நேற்று தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான நாளிலேயே ரேஸிலும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோ ஜிபி மாடல் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

இந்த என்டியூரன்ஸ் ரேஸ் போட்டியில் அனைத்து ரைடர்களுக்கும் 15 நிமிடங்கள் பயிற்சிக்காக நேரம் ஒதுக்கப்பட்டன. இதில் டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் ஸ்டீபன் நீல் கலந்து கொண்டார். மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒரு பத்திரிக்கையாளருடன் மற்றொரு பத்திரிக்கையாளர் இணைந்து ஒரு அணியாக செயல்படும் விதத்தில் போட்டி நடந்தது. இதில் ஆச்சர்யம் தரும் வகையில் சுஸுகி எஸ்எஃப் 250 மோட்டோஜீபி எடிசன் பைக்குகளை ஓட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

பந்தய களத்தில் பயன்படுத்துவதற்கு தக்கவாறு சுஸுகி எஸ்எஃப் 250 மோட்டோஜீபி எடிசன் பைக்கில் ஹெட்லைட், இண்டிகேட்டர்கள், சைடு மிரர்கள், டெயில் லைட்,பின்புற இருக்கை என அனைத்தும் நீக்கப்பட்டு எடை 25 முதல் 30 கிலோ வரை குறைக்கப்பட்டு இருந்தது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

சிறந்த கையாளுமையை வழங்குவதற்காக அதிக இறுக்கமான சஸ்பென்ஷன், க்ளிப் ஆன் வகை ஹேண்டில்பார், மெட்ஸீலர் எம்-7 டயர்கள், ரேஸ் பைக்குகளில் பயன்படுத்தப்படும் பிரத்யேக புகைப்போக்கி குழாய் மற்றும் எஞ்சின் செயல்திறனும் கூட்டப்பட்டு இருந்தது. சாதாரண ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்கைவிட 3 முதல் 4 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும் திறனை இந்த பைக் பெற்றிருந்தது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஸ்டீபன் நீலுக்கு பார்ட்னராக சிஎன்பிசி அவாஸ் தளத்தின் குமார் சஞ்சய் தேர்வானார். இதையடுத்து நடந்த போட்டியில் எமது ஸ்டீபன் நீலின் பார்ட்னரின் சிறந்த லேப் நேரமாக 1:43.786 பதிவானது. ஸ்டீபன் நீல் 1:26.632 நேரத்தில் சிறந்த சுற்றை பதிவு செய்தார். எமது அணியின் சராசரி நேரமாக 1:35.209-ஐ அறிவிக்கப்பட்டது. சராசரியின் அடிப்படையில் எமது அணி 9வது இடத்தை பிடித்தது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

மறுநாள் 40 நிமிட கால அளவுடன் போட்டி நடந்தது. ஒவ்வொரு ரைடரும் 14 நிமிடங்கள் குறைந்தது பைக்கை ஓட்ட வேண்டும். இதன்படி, எமது அணியின் பார்ட்னர் முதலில் 14 நிமிடங்கள் ஓட்டுவதற்கும், மீதமுள்ள மொத்த நேரத்தை ஸ்டீபன் நீலும் ஓட்ட முடிவு செய்யப்பட்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ஆறாவது இடத்தை எமது அணி பிடித்தது.

கோவையில் நடந்த சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...

சுசுகி நிறுவனத்தின் இந்த ரேஸ் போட்டி வார இறுதி நாட்களுக்கு நல்ல அனுபவத்தை ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கும். சுசுகியின் எஸ்எஃப் 250 மோட்டோஜிபி பைக், கரிமோட்டார் வேக களத்திற்கு ஏற்ற வாகனமாக இருந்தது. இந்த மோட்டோஜிபி பைக் விரைவில் நொய்டாவின் புத் இண்டர்நேஷ்னல் ரேஸ் களத்திலும் ஈடுப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2019 Suzuki Gixxer Endurance Race: Suzuki Gixxer SF 250 Race Bike Makes Its Racetrack Debut
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X