தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

இந்திய ஆட்டோமொபைல்துறை சந்தித்து வரும் தொடர் விற்பனைச் சரிவின் காரணமாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தை என்ற பட்டத்தைச் சூடிவந்த இந்திய ஆட்டோமொபைல்துறை அண்மைக் காலமாக படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அதிகபட்ச ஜிஎஸ்டி வரி, பண மதிப்பிழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்டவையே மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றது.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

இத்துடன், அடுத்த வருடம் அமலுக்கு வரவிருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியும், அதன் பங்காக வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, புதிய வாகனம் வாங்கும் மக்களின் முடிவில் இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற பல காரணங்களை நம்மால், தற்போதைய இந்திய ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலைக்கு கூறிக்கொண்டே செல்ல முடியும்.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

ஆனால், இதனால் அவை சந்தித்து வரும் பின்விளைவுகள் எண்ணற்றவையாக இருக்கின்றன. எனவே, அத்தகைய மந்தநிலையில் தப்பித்துக்கொள்ளும் விதமாக, இந்தியாவில் இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

அந்தவகையில், உற்பத்தி எண்ணிக்கையைக் குறைத்தல், தற்காலிக பணியாட்களை வெளியேற்றுதல் மற்றும் ஆலை செயல்பாட்டை தற்காலிகமாக முடக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி, இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீட்டை தள்ளிப்போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சுஸுகி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் பெற்றிருந்தது.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

இருப்பினும், இந்நிறுவனம் தற்போதைய இந்திய ஆட்டோமொபைல்துறையின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, அதன் புதிய உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால், இந்தியாவில் அந்நிறுவனம் செய்யவிருந்த முதலீடு கை நழுவி சென்றுள்ளது. மேலும், பலருக்கு கிடைக்கவிருந்த வேலை வாய்ப்பும் விலகிச் சென்றுள்ளது.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

இந்திய ஆட்டோமொபைல்துறையின் சூழல் இந்தளவிற்கு ரண களத்தில் இருக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தியா வாகனத்துறையின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் மற்றும் மெட்ரோ ரயில்களே காரணம்" என தெரிவித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 100நாள் சாதனைகளை விளக்கும் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

தொடர்ந்து பேசிய அவர், "ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறை சரிவிற்கு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் கூறிவிட முடியாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்போது உள்ள இளைஞர்கள் புதிய வாகனங்களை வாங்குவதற்கு பதிலாக பொது வாகனங்களை பயன்படுத்தும் இந்த சரிவிற்கு காரணம்" என தெரிவித்தார்.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்கள் நீண்ட காலமாக வைத்து வரும் கோரிக்கையான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து கேள்விக்கு, தன்னால் இப்போது எதுவும் கூற முடியாது என கூறினார். அமைச்சரின் இந்த பதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு உச்சபட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதனை 18 சதவீதமாக குறைப்பதே மக்கள் மத்தியிலும் சரி, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்தியிலும் சரி நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்றது.

தொடர் மந்தநிலை: அதிரடி முடிவெடுத்த சுஸுகி... இதற்குதான் ஆசைபட்டீங்களா மோடி ஜி!

இந்த நிலையில், வருகின்ற 20ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடைபெற இருக்கின்றது. இதில், எரிபொருள் வாகனங்கள் மீதான வரிகுறைப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பிற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தவமிருப்பதைப் போன்று காத்துக் கொண்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Auto Industry Slowdown Causes Suzuki’s Investment & Expansion Plans To Be Put On Hold. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X