ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம். இதுகுறித்த விரிவான புள்ளிவிபரங்களுடன் விபரங்களை பார்க்கலாம்.

ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க விற்பனையை பெற்றுவிடுவதற்காக புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. இதனால், இந்த சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டா போட்டி நிலவுகிறது.

ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

எனினும், வாகன விற்பனை குறைந்துள்ள இந்த வேளையில், சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் மட்டும் ஸ்திரமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. பிற நிறுவனங்களை காட்டிலும் சுஸுகி நிறுவனம் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்து வருவதாகவே கருதப்படுகிறது.

ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவியது. இதில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளக்கும் ஹீரோ மோட்டோகார்ப்பை வீழ்த்தி சுஸுகி நிறுவனம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2,49,365 ஸ்கூட்டர்களை விற்பனை செய்த நிலையில், சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் 3,41,928 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து பெரும் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஹீரோ நிறுவனம் 3,91,019 ஸ்கூட்டர்களையும், சுஸுகி நிறுவனம் 2,91,847 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்திருந்தன என்பது நினைவுகூறத்தக்கது. நடப்பு நிதி ஆண்டில் ஹீரோ மோட்டோகார் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை கடுமையாக சரிந்துவிட்டதை இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

MOST READ: மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

இந்தியாவின் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் விற்பனையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் முதல் இடத்தை வழக்கம்போல் தக்க வைத்துள்ளது. இரண்டாவது இடத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தக்க வைத்தது. இந்த காலக்கட்டத்தில் டிவிஎஸ் நிறுவனம் 5,98,617 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் சுஸுகியும், நான்காவது இடத்தை ஹீரோவும் பிடித்த நிலையில், ஐந்தாவது இடத்தில் யமஹா உள்ளது.

MOST READ: பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி!

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்ில் யமஹா நிறுவனம் 1,57,483 ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் இந்த நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது. சுஸுகியை தவிர்த்து, பிற நிறுவனங்களின் ஸ்கூட்டர் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Suzuki Motorcycle India Pvt Ltd (SMIPL) has overtaken Hero MotoCorp to be the third-largest scooter maker by sales in the first half (H1) of the current fiscal, according to the latest data by auto industry body SIAM.
Story first published: Monday, October 14, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X